பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ருக. .鰲_驚「密 இச்சூத்திரத்திற்கு இளம்பூரணர் வரைந்தஉரையாற் புலனாம். இதுபற்றிய விளக்கத்தை முன்னுள்ள இளம்பூசணருரையிலும் அதன் அடிக்குறிப்பிலும் காண்க. இனி, இச்சூத்திரத்தின் முதலிரண்டடியினை ஒரு சூத்திரமாக வும் இறுதியடியினை மற்றொரு சூத்திரமாகவும் கொண்டு உரை வரைந்து விளக்குவர் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும். அவ்விரண்டு சூத்திரங்களுள் முதற் கண்ணதாகிய 'தன்சீர் வகையினும் தளைநிலை வகையினும் இன்சீர் வகையின் ஐந்தடிக்கு முரிய” எனவரும் சூத்திரம், ஆசிரியத்திற்கு உரிச்சீராலும் சீர்வகையடி யு ள என்பதும் அவ்வுரிச்சீரால் தளைவகையடியும் உள என்பதும் அவையும் பதினேழ் நிலத்தின் இகந்து வாரா என்பதும் கூறுகின்றமையின் எய்தாதது எய்துவித்தது என்றும், தன்சீ ருள்வழித் தளைவகை வேண்டா என அடுத்து வரும் சூத்திரம், வெண்பாவிற்குச் சீர்வகையுந் தளைவகையும் கூறுகின்றது என்றும் கருத்துரை வரைந்தனர். இவற்றின் பொருள் விளக்கம் முன்னுள்ள பேராசிரியருரையிலும் அதன் அடிக்குறிப்பிலும் நச்சினார்க்கினியருரையிலும் அதன் அடிக்குறிப்பிலும் இடம் பெற்றுள்ளமை காண்க. ருக. சீரியல் 1மருங்கின் ஒரசை யொப்பின் ஆசிரியத் தளையென் ற்றியல் வேண்டும். இளம்பூரணம் : என் - எனின். ஆசிரியத்தளை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ.ஸ்) சீர்கள் தம்முட்பொருந்தும்வழி நிலைமொழியாகிய இயற்சீரினிறும் வருமொழியாகிய சீரின் முதலசையும் நேராய் ஒன்றின் நேரொன்றாசிரியத் தளையாம்; நிரையாய் ஒன்றின் நிரையொன்றாசிரியத் தளையாம் என்றவாறு. 1. சீரியைமருங்கின்' என்பது, பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் கொண்ட பாடம் , 2. சீரியன் மருங்கின்' என்பதனை இயற்சீர் மருங்கின்' என மொழி. மாற்றிக்கொள்க.