பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

袭_GJ”登上 தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் இரண்டையும் ஆசிரியத்தளை என வேண்டுதலின் பொதுப் படக் கூறினார். அவ்வழி வருஞ்சீர் இயற்சீராயிற் சிறப்பின்றெனவுங்கொள்க ! (ருங்) பேராசிரியம் : இது, கட்டளையடிக்கண் இயற்சீர் தட்குமாறுணர்த்துதல் துதலிற்று. (இ - ள்.) இயற்சீர்பத்தும் பிறிதொன்றனோடு இயையுங் கால் அவை தத்தம் ஈற்றசை ஒன்றி, வருஞ்சீரின் முதலசை யோடொப்ப நிற்பின் ஆசிரியவடிக்குந் தட்கும் முறைமையென் றறியப்படும் (எ - று). "ஒப்பின் ஆசிரியத்தளை யெனவே ஒவ்வாதொழியின் வெண்டளை யென்று எதிர்மறுத்துக் கொள்ளப்படும். என்னை? ‘எடுத்த மொழி யினஞ் செப்பலு முரித்தே' (தொல், சொல்-கிளவி 61) என்றமையின். 1. நேரீற்றியற் சீரும் நிரையீற்றியற்சீரும் நின்று வருஞ்சீருடன் நேராய் ஒன்றின் நேரொன்றாசிரியத்தளையும் நிரையாயொன்றின் திரையொன்றாசிரியத்தளையும் ஆம் என்பார், இயற்சீர் மருங்கின் ஒரகையொப்பின் ஆசிரியத்தளை என இரண்டற்கும் பொதுப்படக் கூறினார். 2. அவ்வழிவருஞ்சீர் இயற்சீராயிற்சிறப்பின்றெனவுங் கொள்க' எனவரும் இவ்வுரைத்தொடரைக் கூர்ந்து நோக்கும் வழி, இயற்சிரொடு ஆசிரியவுரிச்சீரும் ஒரோவழிவெண்சீரும் விரவி வருதல் அகவலோசைக்குச் சிறப்பாகும் எனக் கொண்டார் இளம்பூரணர் எனக் கருதவேண்டியுளது. 3. சீரியன் மருங்கின்' என்ற பாடம் இளம்பூரணருரையில் முதலாவதாக வும், பேராசிரியருரையில் இரண்டாவதாகவும் குறிக்கப்பெற்றிருத்தலால் சீரியன் மருங்கின்' என்பதனை இயற்சீர்மருங்கின்' என மொழிமாற்றி, இயற்சீர் பத்தும் பிறிதொன்றனோடு இயையுங்கால்' என் உரையாசிரியர்கள் மூவரும் பொருள்கொண்டிருத்தல் வேண்டும் எனத் தெரிகின்றது. வெண்பாவுரிச்சீர்’ எனற்பாலதனை உரிச்சீர் வெண்பா (செய். க.க) எனமொழிமாற்றியுரைத் காற்போன்று இயற்சீர் மருங்கின்' எனற்பாலதனைச் சீரியன் மருங்கின் என ஆசிரியர் மொழிமாற்றியுரைத்தார் எனக்கொள்ளுதல் பொருத்தமாகும். இச் சூத்திாத்தில் சிரியன் மருங்கின்' என்ற பாடங்கொள்ளாக்கால், வருஞ்சீரோடு நின்று இசையுஞ்சீர் இன்னதெனத் தெரித்து மொழியப்படாத நிலையில் இது கட்டளையடிக்கண் இயற்சீர்தட்குமாறுணர்த்துதல் நுதலிற்று எனக் கருத்து வரைதற்கு இடமின்மையும் அறிக. 4. ஆசிரியவடிக்குத் தட்கும் என்றிருத்தல் பொருத்தம்.