பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ருங் 32 ...6፣ ፴... 'அகலிரு விசும்பிற் பாயிருள் பருகி' (பத்துப்-பெரும்பாண்.1) என்றவழி நேரும் நிரையும் சீரியை மருங்கின் ஒரசை ஒன்றி ஆசிரியத்தளையாயின. "மல்லர்க் கடந்தா னிறம்போ லிருண்டெழுந்து (ஐந்திணை, ஐம்-1) என்புழி முதலடி இயற்சீர் ஒன்றாது வெண்டளையாயிற்று. மற்றுச் சீரியை மருங்கின் ஒரசையே வரினென்னாது ஒப்பின் என்றதென்னையெனின், உரியசை முதலும் ஈறு மாகியவழி அவை இயலசையோடு ஒப்புமை நோக்கித் தளை கொள்ளினல்லது தம்மோடு தாம் ஒன்றுதல் கொள்ளாரென்றற். கென்பது இதனானும் பெற்றாம். போதுபூ என்பது வருஞ் சீராயவழிப் போரேறு என்பது ஒரசை யொன்றிற்றென்று. ஆசிரியத்தளை யென்னாமையென்பது. இனி, அவை நின்ற சீராய வழி நிரையீறாதல், 'அறியல்வேண்டு மென்ற மிகையானுங் கொள்ளப்படும்.2 இனி, ஈரசை யொப்பி னென்பது பாடமாக உரைப்பின் நேரும்நிரையும்ஒன்றி னென்றவாறுமாமெனக்கொள்க.3 (ருசு) நச்சினார் க்கினியம்: இது கட்டளையடிக்கட் பத்தியற்சீருந் தட்குமாறு கூறுகின்றது. (இ.ள் ) இயற்சீர்பத்தும் பிறசீரோ டியையுங்காற் றத்தமீற்றசை வருஞ்சீரின் முதலசையோடொன்றின் அஃது ஆசிரியவடிக்குத் தட்கு முறைமையென்றறியல்வேண்டும். எ-று ஒப்பினெனவே ஒவ்வாதது இயற்சீர்வெண்டளையென் றெதிர்மறுத்துக்கொள்ளப்படும். 1. இயற்சீர்பத்தனுள் உரியசை முதலும் ஈறுமாய், போதுபூ, போரேறு-என நின்றவழி, இயலசையோடு ஒப்புமைநோக்கி இயற்சீராகத் தளைகொள்வதல்லது உரியசை தம்மொடுதாம் ஒன்றிய ஆசிரியத்தளையெனக் கொள்ளார் என்றற்கு ஒரசையே வரின் என்னாது ஒரசை ஒப்பின்' என்றார். 2. உரியசையினை முதற்கண்பெற்றதும் இறுதிக்கண் பெற்றதும் ஆகிய இயற்சீர், நின்றசீராயவழி, நிரையிறுபோலக் கொள்ளப்படும் என்பது, அறிய'ல் வேண்டும்’ என்னும் மிகையாற் கொள்க என்றவாறு. 3. ஈரசையொப்பின்' என்பது பாடமாயின், நேரும் நேரும், நிரையும் திரையுமாக ஒன்றின் எனப் பொருள்கொள்க என்பதாம்.