பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

空_谷了序° தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் உ-ம். 'அகலிரு விசும்பிற் பாயிருள் பருகி (பெரும்பாண்) என்றவழி நேரும் நிரையும் ஒன்றி நேரொன்றாசிரியத்தளை நிரையொன்றாசிரியத்தளையாயிற்று. 'கற்க கசடறக் கற்பவை கற்றபி னிற்க வதற்குத் தக' (திருக்குறள்-391) என நேரும் நிரையும் ஒன்றாது இயற்சீர் வெண்டளையாயிற்று. "நீத்துநீர்ப் பரப்பி னிவந்துசென் மான்றேர்’ என்புழி நீத்துநீர் என்பது நேர்புநேர் பாதிரிபோல நின்று பரப்பின் என்பதனோடு நிரையொன்றாசிரியத்தளையாயிற்று. சேற்றுக்கா னிலம் இது நேர்புநேர் பாதிரிபோல நின்று ஒன்றாது இயற்சீர் வெண்டளையாயிற்று இனிக் காரேறு பொருத கண்ணகன் செறுவின் என்புழிக் காரேறு என்னும் நேர்நேர்பு பாதிரிபோல நின்று பொருத என்பதனோடு நிரையொன்றாசிரியத் தளையாயிற்று. வானூடு போய' என நேர் நேர்புஒன்றாது இயற்சீர் வெண்டளையாயிற்று. வானிரைத்து மணந்து என நேர்நிரைபு பாதிரி போல நின்று மணந்து என்பதனோடு நிரை யொன்றாசிரியத்தளையாயிற்று யானிருந்துதுரங்கும்’ என நேர் நிரைபு ஒன்றாது இயற்சீர்வெண்டளையாயிற்று. ‘வெயிலாடுமுசுவின்' என நிரைநேர்பு கணவிரிபோல நின்று முசு என்பத னோடு நிரையொன் றாசிரியத்தளையாயிற்று. வரையாடு வன்பறழ் என நிரைநேர்பு ஒன்றாமையின் இயற்சீர் வெண்டளை யாயிற்று. கடலுடுத்து விசும்புசூடி" என நிரைநிரைபு ஒன்றி நிரையொன் றாசிரியத்தளையாயிற்று. சிலைவிலங்கு நீள்புருவம்’ என நிரைநிரைபு ஒன்றாமையின் இயற்சீர் வெண்டளையாயிற்று என உரியசைமயங்கிய இயற்சீராறும் ஒன்றியும் ஒன்றாதும் வந்தன. ஓரசைச்சீ ரிரண்டும் இயற்சீருமாய்த் தட்குமாறு முற் கூறினாம்.1 ஆய்வுரை : இஃது, ஆசிரியத்தளையாமாறு உணர்த்துகின்றது. (இ - ள்) இயற்சீர்கள் தம்முட் பொருந்தும்வழி நிலை மொழியாகிய இயற்சீரின் ஈற்றசையும் வருமொழியாகிய சீரின் முதலசையும் ஒரசையாய் ஒத்துவரின் ஆசிரியத்தளையாம் எ-று. 1. செய்யுளியல் .அ-ஆம் சூத்திரம் நச்சினார்க்கினியர் உரை நோக்குக.