பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@.*9# @- தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் களிறுவழங்குகுரவு, களிறுவிரவுகடறு, அரவுவழங்கு கடறு என மூன்றும் ஏழெழுத்துச்சீர்; களிறுவிரவுகுரவு, அரவு வழங்குகுரவு, அரவுவிரவுகடறு என மூன்றும் எட்டெழுத்துச்சீர்; அரவுவிரவுகுரவு என்பது ஒன்பதெழுத்துச்சீர்: இவையெல் லாந்தொகுப்ப ஏழெழுத்துச்சீர் முப்பத்துமூன்றும் எட்டெழுத்துச் சீர் ஒன்பதும் ஒன்பதெழுத்துச்சீர் ஒன்றும் ஒழித்து, ஒழிந்த வஞ்சியுரிச்சீர் நூற்றெண்டத்தொன்றும் உறழ்நிலையுடைய வெனக் கொள்க.1 ஏழெழுத்துச்சீரும் எட்டெழுத்துச்சீரும் ஒன்பதெழுத்துச் சீரும் அடியுறழ்வனவாக்கி மேன்மூன்று சீரானும் மூன்று நிலனேற்றிப் பதினைந்தெழுத்தடியளவும் உறழும் வஞ்சியடி என்பாருமுளர். அங்ங்ணம் ஒன்பதெழுத்துச்சீர் இரண்டு வந்த குறளடி பதினெட்டெனப்படுதலின், வஞ்சிநிலம் பதின்மூன்றாதல் வேண்டும், ஒசை நோக்காது சீர்நோக்கி உறழ்ச்சி கொள்ளினென மறுக்க.2 அவை அளவடியோடு ஒத்த சிறப்பினவன்மையானும், அவற்றுக்குத் தளைவகை யின்மையானும் எடுத்தோதித் தொகை கூறிற்றிலனாயினும், நாம் அவற்றை எண்ணி உணர்ந்து கூறுங் 1. 1. களிறுவழங்குகாடு - அரவுவழங்குகாடு களிறு விரவுகாடு - அரவுவிரவு - காடு (7) களிறுவழங்கு காவு - அரவுவழங்கு காவு:7- களிறு விரவுகாவு 7- அரவு விரவு காவு (8) 2 பாம்புவழங்குகடது - மின்னு வழங்குகடறு - பாம்பு விரவுகடறுமின்னுவிரவுகடறு (7) பாம்புவழங்கு குரவு - மின்னு வழங்கு குரவு (7) பாம்பு விரவுகுரவு 7 மின்னுவிரவுகுரவு (8) 3 களிறுபோகு கடறு - அரவு போகுகடறு களிறு மேவு கடறு அரவு மேவுகடறு (7) களிறுவழங்கு குரவு - 7 அரவு விரவுகுரவு - 9 களிறு மேவுகுரவு 7 -அரவுமேவுகுரவு (8) 224 ஆக விரிந்த வஞ்சியுரிச்சீர்களில் ஏழெழுத்துச் சீர் 33, எட்டெழுத்துச் சீர் 9, ஒன்பதெழுத்துச் சீர் 1 ஆக நாற்பத்துமூன்று சீர்களையும் நீக்கி எஞ்சிய 181 சீர்களும் வஞ்சியடியில் வைத்து உறழும் நிலையினையுடைய என்பர் பேராசிரியர், 2. ஏழெழுத்துச்சீரும் எட்டெழுத்துச்சீரும் ஒன்பதெழுத்துச்சீரும் வஞ்சியடியுள் உறழ்வனவாகக்கொள்ளின் ஒன்பதெழுத்துச்சீர் இரண்டுவந்து குறளடி பதினெட்டெழுத்துடைமையான் வஞ்சிநிலம் ஆறெழுத்துமுதல் பதினெட்டுவரை பதின்மூன்றாகி வஞ்சிக்குரிய துரங்க லோசை கெடும் என மறுப்பர் பேராசிரியர்,