பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ருச இஆதி இ. கால், ஒருசீர்க்கு அடிநான்காக வஞ்சியடி எழுதுாற்றிருபத்து நான்காமெனக் கொள்க. அவையுறழுங்கால் மூன்றெழுத்துச் சீர் ஆறாதி ஒன்பது உயர்வும், நாலெழுத்துச்சீர் ஏழாதி பத் தெழுத்துயர்வும், ஐயெழுத்துச்சீர் எட்டாதி பதினொன்றுயர் வும், ஆறெழுத்துச்சீர் ஒன்பதுமுதல் பன்னிரண்டுயர்வும் பெற்று நின்ற சீரோடு மூன்றெழுத்துச்சீரும் நாலெழுத்துச்சீரும் ஐயெழுத்துச்சீரும் ஆறெழுத்துச்சீருந் தந்துறழ்கவென்பது. அவை: 'கால்காய்ந்தது காம்புநீடி’ என்பது ஆறெழுத்தடி. “நல்கூர்ந்தது வில்லோர்சுரம்' என்பது ஏழெழுத்தடி. 'வான்பெய்தது மண்குளிர்ப்புற” என்பது எட்டெழுத்தடி தேன்பெய்தது செழுநகர்தொறும்” என்பது ஒன்பதெழுத்தடி. இவை மூவெழுத்து மாசெல்காடு நின்றுறழ்ந்த நான்கடியும் வந்தவாறு ஒழிந்தனவும் அன்ன. “மண்மாய்ந்தென வுள்வீழ்ந்தது” என்பது ஏழெழுத்தடி. 'விண்பாய்ந்தென மேற்றொடுத்தது என்பது எட்டெழுத்தடி. 'காடோங்கிய கல்கெழுசுரம்’ என்பது ஒன்பதெழுத்தடி. 'கோடோங்கிய குறும்பொறைமருங்கு” என்பது பத்தெழுத்தடி. 1. வஞ்சியடி அளவடியோடு ஒத்த சிறப்பின்மையாலும் அவற்றுக்குத் தளைவகை யில்லாமையாலும் ஆசிரியர் தொல்காப்பியனார் வஞ்சியடிகளை எடுத்தோதித் தொகை கூறாது விட்டார். எனினும் உரைவரைந்த பேராசிரியர் நாற்சீரடியாகிய அளவடிக்குரிய எழுத்தெண்ணிக்கையை யுளங்கொண்டு இருசீரடியாகிய வஞ்சியடிகளையுமெண்ணியுறழ்ந்து, இருநூற்று இருபத்துநான்காய் விரியும் வஞ்சியுரிச்சீர்களுள் வஞ்சியடியுள் வைத்து உறழத்தக்கன நூற்றெண்பத்தொன்றேயெனவும் அவை உறழுங்கால் ஒருசீர்க்கு எழுத்துவகையால் அடி. நான்காக (181x4=724) எழுநூற்று இருபத்துநான்காம் எனவும் வரை. யறுத்துக் கூறியுள்ளமை காணலாம்.