பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ருச உஅரு நச்சினார்க்கினியம் : இது வஞ்சியடி யுறழுமாறும் அது பெறுநிலனு முணர்த்திற்று. (இ-ள்.) நாலெழுத்து முதலாகப் பதினான்கெழுத்தளவும் உறழுநிலையில, வஞ்சியடிக்கு. எ-று.1 முற்கூறிய அறுபது வஞ்சியுரிச்சீருள்ளும் இருபத்துநான்குசீர் ஒரொன்று இருநிலைமையவாகவும் இருபத்தெட்டுச்சீர் ஒரோவொன்று நான்கு நிலைமையவாகவும் எட்டுச்சீர் ஒரோவொன்று எட்டு நிலைமையவாகவும் கொள்ளப்படும். அங்ங்னம்கொள்ளவே இருநூற்றிருபத்துநான்காம். அவற்றுள் இருநிலைமைப்படும் இருபத்துநான்கும் நேரீறெட் டும், நிரையிறெட்டும், நேர் பீறு நான்கும், நிரைபீறு நான்குமாம். அவை மாபோகுவாய், மாவழங்குவாய், புலிபோகுவாய், புலிவழங்குவாய், பாம்புசேர்வாய், பாம்புவருவாய், களிறுசேர்வாய், களிறுவருவாய் எனவும், மாசேர்கரம்,மாவருகரம், மாபோகுசுரம், மாவழங்குசுரம், புலிசோ சுரம், புவிவருகரம், புலிபோகுசுரம், புலிவழங்குசுரம் எனவும், மாசேர்காடு, மாவருகாடு, புவிசேர். காடு, புலிவருகாடு எனவும், மாசேர்கடறு, மாவருகடறு, புலிசேர் கடறு, புலிவருகடறு எனவும் வரும். மாபோகுவாய் என்றதற்கு மாமேவுவாய் என முற்றுகரங்கொடுத்து இருநிலைமையாக்குக. ஒழிந்தனவற்றுட் குற்றுகரங்கட்கு மிவ்வாறே முற்றுகரம் பெய்தொட்டுக. இவற்றுள் மாசேர்கரத்திற்கு ஞாண் ஞாயிறு எனவும் மாவருசுரத்திற்கு மாவலியதெனவும் புலிசேர் சுரத்திற்கு வருஞாயிறு எனவும் புலிவருசுரத்திற்குத் திருவலியது எனவும் எழுத்துக்குறையுஞ் சொற்பெய்து இருநிலைமைபெய்க. இங்ங்னம் இருநிலைமையான் நாற்பத்தெட்டாயிற்று. இவற்றுள் ஏழெழுத்துச்சீர் இரண்டாம். இனி நான்கு நிலைமைப்படும் சீர் இருபத்தெட்டும் நேரீறு. நான்கும், நிரையிறெட்டும். நேர்பீறெட்டும், நிரையிறெட்டுமாம். அவை பாம்புபோகுவாய், பாம்புவழங்குவாய், களிறுபோகுவாய், களிறுவழங்குவாய் எனவும் பாம்புசேர்சுரம், பாம்புவருசுரம், பாம்புபோகுசுரம், பாம்புவழங்குசுரம், களிறுசேர்சுரம், களிறுவருசுரம், களிறுபோகுசுரம், களிறுவழங்குசுரம் எனவும் 1. இச்சூத்திரவுரை பேராசிரியர் உரையினை முழுவதும் அடியொற்றி யமைந்துள்ளமை காண்க.