பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ருச و3كم وبيج ساتي இமிழ்துரங்கிசை யினச்சுரும்புவர” என்பது பதினோரெழுத்தடி, இவை நான்கும் ஐயெழுத்துப்புலிசேர்சுரம் நின்றுறழ்ந்தவடி, இனி ஆறெழுத்துச்சீர் வருமாறு: அமைவிடுநொடி யஞ்சியோர்த்து. என்பது ஒன்பதெழுத்தடி. 'கனைகுரலன கானத்தளகு' என்பது பத்தெழுத்தடி. 'தினைப்புனத்தித ணயற்பிரியாது’ என்பது பதினோரெழுத்தடி. ‘மனைக்குறமகள் கடைப்புறந்தரும்' என்பது பன்னிரெழுத்தடி, இவ்வாறே யொழிந்தனவு முறழ்ந்துகொள்க. வஞ்சி மூன்றுபாவும்போலச் சிறப்பின்மையின் ஈண்டுப். போதந்து கூறினார். ஒழிந்த முச்சீரடி சிறுவரவிற்றாகலின் அதற்குக் கட்டளையடிக்குக் கூறிற்றிலர். ஆய்வுரை : இது வஞ்சிப்பாவிற் பயிலும் அடிவரையறைபற்றியதோர் ஐயம் அகற்றுகின்றது. (இ-ள்) குறளடியின் சிற்றெல்லையாகிய நாலெழுத்து முதலாக அளவடியின் பேரெல்லையாகிய பதினான்கெழுத்தளவும் உறழும் நிலையினை வஞ்சியடிகள் உடையன அல்ல எ-று. எனவே குறளடியின் பேரெல்லையாகிய ஆறெழுத்து முதலாக அளவடியின் நடுவெல்லையாகிய பன்னிரண்டெழுத்தளவும் வஞ்சியடி உறழும் எனவும், எனவே வஞ்சியடிக்கு நிலம் ஏழென்பது சொல்லியவாறாம் எனவும் கொள்வர் பேராசிரியர். ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா என்னும் மூவகைப் பாக். களுக்கும் உரிய நாற்சீரடியின்கண்ணேயே ஐவகையடியும் வந்து உறழக் கட்டளை கூறியது கண்ட மாணவன், நாற்சீரடி பெறாத வஞ்சிப்பாவிற்குரிய குறளடி சிந்தடி என்பவற்றிலும் இவ்வாறு எழுத்தளவுபற்றிச் சீர்களை உறழ்ந்து காணுதலுண்டோ என வினவினாற்கு, அவை அங்ங்ணம் உறழும் நிலை இல' என இச். சூத்திரத்தால் ஐயமகற்றினார் தொல்காப்பியனார் எனக் கொள்ளுதல் ஏற்புடையதாகும்.