பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உகூம் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் ருரு அளவுஞ் சிந்தும் வெள்ளைக் குரிய தளைவகை ஒன்றாத் தன்மை யான. இளம்பூரணம் : என்-எனின். வெண்பாவிற்குரிய அடியுந் தளையும் வரை. யறுத்துணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்) அளவடியும் சிந்தடியும் வெண்பாவிற்குரிய, தளை. வகை ஒன்றாத் தன்மைக்கண் என்றவாறு 1 எனவே, ஒன்றுந் தன்மைக்கண் நெடிலடியும் சில வரும் என்று கொள்க.2 இச்சூத்திரத்தால் வெண்பாவிற் குரியதோர் தளை உணர்த் தினாராம். சிந்தடியாவது ஏழெழுத்து முதல் ஒன்பதெழுத்தீறாகிய அடி. அளவடியாவது பத்தெழுத்து முதலாகப் பதினான் கெழுத்தீறாகிய அடி, தளைவகை ஒன்றாமையாவது, நிலை மொழியும் வருமொழியும் ஆகிய இயற்சீர் நேராயொன்றுவதும் நிரையாயொன்றுவதுமன்றி மாறுபட வருவது. அவ்வழி நிரையீற்றியற்சீர் நிற்ப நேர்வரினும் நேரீற்றியற்சீர் நிற்ப நிரை வரினும் இயற்சீர் வெண்டளையாம். இனி ஒன்றுந் தன்மையா வது வெண்சீர் நிற்க வருஞ்சீர் முதலசையோ டொன்றுவது வெண்டளையாம். இவ்விரண்டும் வெண்பாவிற்குத் தளையா மென்று கொள்க. உதாரணம் “மட்டுத்தா னுண்டு மணஞ்சேர்ந்து விட்டுக் களி யானை கொண்டுவா வென்றான் அளியார்முன் யாரோ வெதிர்நிற் பவர்.” (யாப். வி. பக் சசுங்) ஒன்றாமையாற்கொள்ளப்படும் இயற்சீர் வெண்டளைக்கண் பத்தெழுத்து முதல் பதினான்கெழுத்தீறாய அளவடியும் ஏழெழுத்துமுதல் ஒன்பதெழுத்தீறாய சிந்தடியும் வெண்பாவுக்கு உரியன என்பதாம். தளைவகையொன்றாத்தன்மையாவது நிரையிற் றியற்சீர்நிற்ப நேரசையும், நேரியற்றியற்சீர்நிற்ப நிரையசையும் என மாறாகத் தளைக்கப்படுதல். இஃது இயற்சீர் வெண்டளையெனப்படும். 1. 2. தளைவகையொன்றுந்தமையாவது வெண்சீர் நிற்ப வருஞ்சீர் முதலசையோடு நேராயொன்றுதல். இதுவெண்சீர் வெண்டளையெனப்படும். தளைவகை ஒன்றாத் தன்மைக்கண் (அஃதாவது இயற்சீர் வெண்டளைவருமிடத்து) அளவடியும் சிந்தடியும் வெண்பாவுக்கு உரிய எனவே, தளைவகையொன்று ந் தன்மைக்கண் (அஃதாவது வெண்சீர் வெண்டளைவருமிடத்து) நெடிலடியும் சில வரும் என்பது பெறப்படும்.