பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ருரு 竺.卤秀 安 இஃது ஏழெழுத்தான் வந்த அடி. 'இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது.” இஃது எட்டெழுத்தான் வந்த அடி. (நாலடி. கட கூ) 'சென்று முகந்து நுதல் சுட்டி மாறோர்த்து வென்று வியர்த்தா னென்கோ’ (யாப் வி. பக சகாச) இஃது ஒன்பதெழுத்தான் வந்த அடி. "துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு. (குறள் கஉ) இது பத்தெழுத்தான் வந்த அடி. 'ஏரி னுழாஅர் உழவர் புயலென்னும்.' (குறள். கச) இது பதினோரெழுத்தான் வந்த அடி 'மலர்மிசை ஏகினான் மானடி சேர்ந்தார்.’ (குறள் ங்) இது பன்னிரண்டெழுத்தான் வந்த அடி. 'இருள் சேர் இருவினையுஞ் சேரா இறைவன். (குறள் ரு) இது பதின்மூன்றெழுத்தான் வந்த அடி. 'கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்.” (குறள் உ) இது பதினான்கெழுத்தான் வந்த அடி. 'முகமறியார் மூதுணர்ந்தார் முள்ளெயிற்றார் காமம் அகமறைந்தான் வாழுமென் றார-மகமறையாம் மன்னை நீ வார்குழை வையெயிற்றா யென்றோமற் றென்னையும் வாழு மெனின்." (யாப். வி. பக். சகரு) இது பதினைந்தெழுத்தான் வந்த அடி, 'படியுடையார் பற்றமைந்தக் கண்ணு மடியுடையார்.' (குறள். சுOசு) இது பதினாறெழுத்தான் வந்த அடி. இவையிரண்டும் நெடிலடி (ருரு) பேராசிரியம் : இஃது ஆசிரியவடிக்கும் அதன் நடைத்தாகிய வஞ்சியடிக்கும் உரிய நிலங்கூறி வெண்பாவிற்குரிய நிலங் கூறுகின்றது. (இ - ள்.) அளவடி ஐந்துஞ் சிந்தடி மூன்றுமென எட்டு நிலம்பெறுந் தளைவிரவாதவாற்றான் வெண்பாவடி (எ . று)