பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ருரு 2-562 shi அளவுஞ் சிந்தும் வெள்ளைக் குரிய’ என்றானென்பது. 'மாவருவாய் மாவருவாய் மாவருவாய் மாவருவாய்” என்றக்கால், இதனை 'அசையுஞ் சீரு மிசையொடு சேர்த்தி” (தொல், செய்-11) என்றதனாற் கலியோசை பிறப்பவுஞ் சொல்லிக் கண்டுகொள்க. 'மாவருவாய் மாவருவாய் மாவருவாய் மாவருவாய் மாவருவாய் தேமா வரகு’’ என்றிதனையே ஒசையூட்ட வெண்பாவாயிற்று. இது, “மாவருவாய் மாவருவாய் மாவருவாய் மாற்றினரே' எனக் கவியோசையாயினவாறறிக. (ருஅ) நச்சினார்க்கினியம் : இஃது ஆசிரியவடிக்கும் அதனடைத்தாகிய வஞ்சியடிக்கும் உரிய நிலங்கூறி வெண்பாவிற்குரிய நிலங்கூறுகின்றது. (இ-ஸ்) அளவடியைந்தும் சிந்தடிமூன்றும் என்ற எட்டுநிலனும் வெண்பாவிற்குரிய, தளைவகையொன்றாத தன்மையான். எ-று. ஒன்றாத்தன்மையான்’ என்றதனானே ஒன்றிய ஆகாவாயிற்று2. அஃது இயற்சீரொன்றிய வாசிரியத்தளை வாராமையும் வெண்சீர்நிற்ப வெண்சீர் வந்தொன்றிய வெண்டளை செப்பலோசைக்குந் துள்ளலோசைக்கு மொப்ப வுரியவாகலின் அது வாராவென்றலும் கூறிற்றாம். ஒன்றாதென்ற தனானே கலித்தளை யொன்றுமென்று பொருடருமேனும் அஃதிலக்கணமன்மையுணர்க. எனவே முற்கூறிய இயற்சீர் முன் பக்கத் தொடர்ச்சி என்றார் ஆசிரியர். எனவே சிந்தடிக்குரிய 7, 8, 9 எழுத்துக்களும் அளவடிக்குரிய 10, 11, 12, 13, 14, எழுத்துக்களும் ஆகிய எட்டு நிலங்களும் வெண்பாவுக்குரியன என்பதாம். 1. இயற்சீர் நின்று வருஞ்சீர் முதலசையோடு நேர்முன்நேர், நிரை முன்நிரையாக ஒன்றாமையும், வெண்சீர் நிற்ப வெண்சீர் வந்து ஒன்றாமையும் பெற்ற வெண்பா, கட்டளையடிகளாகிய அளவடியைந்தும் சிந்தடி மூன்றும் என்ற எட்டு நிலமும் பெறும் என்பதாம், 2. மேற்குறித்தவாறு ஒன்றாத தன்மைக்கண் அளவடியும் சிந்தடியும் உரிய என்றதனானே ஒன்றியன கட்டளையடிக்கு ஆகா என்றாராயிற்று.