பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

爱_安碑乐° தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் வெண்டளையையும் வெண்சீரியற் சீரோடு தட்ட வெண்சீர். வெண்டளையையும் விலக்காமையுணர்க உ-ம் நின்று நினைந்து நெடிது பெயர்ந்து' என்பது ஏழெழுத்தடியா யிசைநிலை நிறையநின்ற அசைச்சீர் இயற்சீராய்த் தட்டது. 'கற்றவரைச் சேர்வர் கலைநிறையுங் காட்சியார் பெற்றன. மென்றே பெயர்ந்து' இது பதினான்கெழுத்தடி. ‘அறிவறிந்தார்த் தேற்றியக்கா லஞ்சுவ தில்லை’ இது பதினான்கெழுத்தென்னுஞ் சீர்வகையொன்றலிற் கட்டளை. யாகா. இதனும்பர் நெடிலடியான் வந்தன சீர்வகை யடியாம். ‘வானவரு நான்முகனும் வாசவனு மாமுனிவ ரானவருங் காணா வரன்’ எனப் பதினாறெழுத்தான்வந்த வெண்சீரொன்றிய சீர்வகையடி. ‘வானவரு நான்முகனும் வாசவனுங் காணாரே' என்பது துள்ளலோசைக்குணர்க; இவ்வெண்பாவை ஏந்திசைச்செப்பலெனப் பின்னுள்ளோர் கூறுவர். அவர் கூறும் ஒழுகிசையுந் துரங்கிசையும் பெரும்பான்மை பதினான்கெழுத்தி னிகந்து வாரா வென்றுணர்க. முச்சீரான்வரும் ஈற்றடியு முதலிய மூன்று நிலத்தி னிகந்து வாராமை யுரையிற் கொள்க. ‘மாவருவாய் மாவருவாய் மாவருவாய் மாவருவாய் மாவருவாய் தேமா வரகு" இது 'மாவருவாய் மாவருவாய் மாவருவாய் மாற்றினரே' என இரண்டற்கும் ஒப்ப நின்றவாறுங் காண்க. இதனானே மேல் ஈரடிக் கூட்டத்துத் தொடைகொள்ளுங்காற் கலிக்கு வெண் சீரோடு தட்ட வெண்சீர் வெண்டளை கொள்ளுமாறுணர்க. ஆய்வுரை : இது வெண்பாவிற்குரிய அடியும் தளையும் வரையறுத்து உணர்த்துகின்றது. 1. முச்சீரான்வரும் ஈற்றடியும் (ஏழெழுத்து) முதலிய மூன்று நிலத்தினிகந்து வாராமை யுரையிற்கொள்க’ ’ என்றிருத்தல் வேண்டும். எனவே ஏழெழுத்தும் எட்டெழுத்தும் ஒன்பதெழுத்தும் ஆகிய மூன்று நிலங்கள் வெண்பாவின் ஈற்றடியாகிய சிந்தடிக்குரியன என்றாராயிற்று.