பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ.கி) கன் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம். இவ்விலக்கணங் கலித்தளை வருமிடத்தே கொள்க. கலியடியென்னாது கலித்தளையடி என்றது உம் இவ்வேறுபாடு குறித்தென்க.1 மரல்சாய மலைவெம்ப மந்தி உயங்க." (கலித். கங் ) இது பதின்மூன்றெழுத்தான் வந்தது. ‘வீங்குநீர் அவிழ்நீலம் பகர்பவர் வயற்கொண்ட,’ இது பதினான்கெழுத்தான் வந்த அடி. கலித் காச) அடிதாங்கும் அளவின்றி அழலன்ன வெம்மையால்.’ இது பதினைந்தெழுத்தான் வந்த அடி, (கலித். க.க) அரிதாய அறனெய்தி அருளியோர்க் களித்தலும்.' இது பதினாறெழுத்தான் வந்த அடி. (கவித் க.க) "முதிர்கோங்கின் முகையென முகஞ்செய்த குரும்பையென.” இது பதினேழெழுத்தான் வந்த அடி. (கலித் ருசு) 'அறனின்ற விதையொழியா னவலங்கொண் டதுநினையான்.” இது பதினெட்டெழுத்தான் வந்த அடி. (யாப்.வி பக் சகrஅ) 'உகுபனிகண் உறைப்பவுநீ ஒழிபொல்லாய் செலவலித்தல்' இது பத்தொன்பதெழுத்தான் வந்த அடி. (யாப்.வி பக்.ச.சு.அ) 'நிலங்கிளையா நெடிதுயிரா நிறைதளரா நிரைதொடியாள்'. (யாப். வி. பக். சகrஅ) இது இருபதெழுத்தான் வந்த அடி. (ருகா) முன் பக்கத் தொடர்ச்சி கடந்து எழுத்து மிக்குவருவன பதின்மூன்றெழுத்தும் பதினான்கெழுத்துமாகிய அடிகளாதலின் அவை அளவடி மிகுதி எனப்பட்டன. இருநெடிலடியாவன நெடிலடியும் கழிநெடிலடியும். 1 , இவ்வெழுத்து வரையறை வெண்சீர்நிற்ப வருஞ்சீர் நிரையாய் வரும் கலித்தளை படியின் கண்ணேயே கொள்ளத்தக்கது என்பார், இவ்விலக்கணங் கலித்தளை வரு மிடத்தே கொள்க' எனவும், கலியடி’ எனப் பொதுப்படக்கூறாது, கலித்தளையடி (செய் உச.) என ஆசிரியர் தெரித்து மொழிந்ததும் இவ்வேறுபாடு கருதியே எனவும் விளக்கத்தருவர் இளம்பூரணர்.