பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ருசு இ.இ 5' பேராசிரியம் : இது முறையானே கலிக்குரிய நிலமுணர்த்துதல் துதலிற்று. (இ ள்.) ஐவகையடியினும் அளவடி மிகுதியாகிய பதின் மூன்றெழுத்தும் பதினான்கெழுத்தும் நெடிலடியும் கழிநெடி லடியுங் கலியடிக்குரிய (எ - று). எனவே, அதுவுந் தன் முதற்பாவாகிய வெண்பாப் போல எட்டுநிலம் பெறுவதாயிற்று. ஒழிந்த அடி மூன்றனோடும் ஒவ்வாது மிக்க நிலம் இரண்டனையும் மிகுதியென்றானென்பது.? இன்ரி, 'ஒத்த நாலெழுத் தொற்றலங் கடையே’ (தொல் செய்.38) என்பதே கொண்டு பதினோரெழுத்தடி முதல் நான்கு நிலனும் அளவடி மிகுதியெனப்படும் எனவும், அவை கவிக்குரிய எனவுங் கொள்வாருமுளர் 3 அங்ங்னங் கொள்வார்க்கு, “ஞாயிறு கடியாறு கடியாறு கடியாறு’ என்றதனைப் பதினோரெழுத்தடியென்று காட்டல் வேண்டும். அஃது ஆசிரியவடியாம். ஆகலான் அற்றன்றென்பது இனி, ஞாயிறு மாசேர்வாய் மாசேர்வாய் மாசேர்வாய்” என்பதோவெனின், அது கலிப்பாவோடு தளைவகை ஒன்றிய வெண்பாவடியாகலானும், நிரைமுதல் வெண்சீர்வந்து நிரை தட்பினன்றி ஞாயிறு என நின்ற நிரையீற்று இயற்சீர்ப்பின்னர் நேர்வந்தாற் கலித்தளையாகாது வெண்டளையாமாகலானுங் 1. கலிப்பாவாகிய அது, தன் தோற்றத்திற்கு அடிப்படையாயுள்ள வெண்பாப் போன்று எட்டுநிலம் பெறும் என்பதாயிற்று. 2. 0, 11 , 12, 13, 14 என்னும் எழுத்துக்களாலாய ஐவகையளவடிகளுள் 10, 11, 12 எழுத்துக்களாலாகிய மூன்றடிகளோடும் ஒவ்வாது பதின்மூன்றும், பதினான்கும் ஆக எழுத்துக்களால் மிகுந்த அடியிரண்டனையும் அளவடி மிகுதி' என்றார். இருநெடிலடி யாவன : நெடிலடியும், கழிநெடிலடியும். 3, பத்தெழுத்தென்ப நேரடிக்களவே என அதன் சிற்றெல்லை கூறி அதன் மேல் ஒத்தநாலெழுத்து முதல் நான்கு நிலனும் அளவடி மிகுதியெனக்கொள்வாருமுளர். இங்ங்னங் என ஆசிரியர் குறிப்பிடுதல் கொண்டு, பதினோரெழுத்து கொள்வார் இன்னாரெனத் தெரியவில்லை. இங்ங்ணங்கொள்வோர் கலிப்பாவுக்குரிய பதினோரெழுத்தடியாக ' ஞாயிறு கடியாறு கடியாறு கடியாறு' என்பதனைக் காட்டுவர், இஃது ஆசிரியவடியாவதன்றிக் கவியடியாகாது.