பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IᏏ_ 6rᎢ தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் (இ - ள்) நிரையிற்றியற்சீரும் நிரையீற்றாசிரியவுரிச்சிரும் நிற்ப நிரைமுதல் வெண்சீர் வந்து நிரையொன்றியக்காலுங் கலித்தளையாம் (எ - று). ‘மணிபுரை திருமார்பின் மறுத்தயங்கத் தோன்றுங்கால்' என்புழித் திருமார்பின்’ என நிரைமுதல் வெண்சீர் வந்து ‘மணிபுரை யென்னுஞ்சீர் இறுதி நிரையொடு தட்டுக் கலித்தளை யாயிற்று. எனவே, நிரைமுதலியற்சீர் வந்து நிரைதட்பினும் நேர்முதல் வெண்சீர் வந்து ஒன்றாதொழியினும் அது கட்டளை வகையாற் கலியடியாகாதென்றவாறு; என்னை? துள்ளாத இயற்சீர்ப்பின் நிரைமுதல்வெண்சீர் வந்து துள்ளுவிக்கல் வேண்டுமாதலானும், ஞாயிறு மாசேர்வா யென்பது வெண்பா வடியுமாம் ஆகலானுமென்பது. அவ் அடிக்கென்ப' என்றதனான் இதுவுங் கட்டளையடிக்கே யென்பது கொள்க. மற்று நிரைமுதல் வெண்சீர் வருவது, முதனின்ற இயற்சீர்ப்பின்னர் இடைநின்ற இயற்சீர்ப்பின்னரென்ப தறியுமாறென்னையெனின், அங்ங்னம் வரையாது கூறினமையின் முதற்கண்ணதே இவ்விதியென்ப தாம். அல்லது உம் அவ்வாறு இயற்சீரினை இடையும் வருமென்று கொள்ளிற் பதின்மூன்றெழுத்திற் சுருங்கிய நிலனும் அது பெறுவான் செல்லும். செல்லவே கலியோசை இனிது பெறலாகாவென மறுக்க, என்றார்க்குப் பின்வருஞ்சீர் மூன்றும் நிரைமுதல்வெண்சீர் வருவதென்றிலனாதலின் மூன்றாஞ்சீர் நேர் முதல் வெண்சீர் வந்தும், வெண்சி ரீற்றசை நிரையசை யியற்றே (தொல். செய்.29) என்றதனானும் இடைநிற்பன வெண்சீரென்பது பெறுதுமாக லானும் அது கட்டளையன்றென்பது. இனி முதனின்றது நிரை 1. வருஞ்சீரினை நிரைமுதல் வெண்சீர் என ஆசிரியர் கிளந்தெடுத்தோதினமையால் அதற்குமுன் நின்ற சீர் நிரையிற்று இயற்சிராகவோ அன்றி நிரையிற்று ஆசிரியவுரிச்சீராகவோ நின்று நிரைமுதல் வெண்சீரோடு நிரையாய் ஒன்றுதலுங் கலித்தளை விகற்பமாம் எனவும், எனவே நிரைமுதலியற்சீர் வருஞ்சீராய் வந்து நிரையாய்த் தளைத்தாலும் நேர்முதல் வெண்சீர் வந்து நிரையீறாய் நின்ற இயற்சிரொடு ஒன்றாதொழியினும் அது கட்டளை வகையாற் கலியடியாகாதெனவும், துள்ளலோசையில்லாத இயற்சீர்ப்பின் துள்ளலோசை யினைத் தோற்றுவித்தல் வேண்டின் நிரைமுதல் வெண்சீர் வருதல் வேண்டு. மெனவும், அவ்வடிக்கென்ப' என்றதனால் இவ்விதியும் கட்டளையடிக்கேயுரிய தெனவும், இவ்வாறு இயற்சீர் நிற்பது அடிமுதற்கண்ணேயெனவும் இங்குப் பேராசிரியர் தரும் விளக்கம் மனங்கொளத் தகுவதாகும்.