பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா க கரு அறியச்செய்தலை. கைகோள் என்றது அவ்வத்தினையொழுக்கம் அறியச் செய்தலை கூற்றுவகையென்றது அச்செய்யுட் கேட்டோரை இது கூறுகின்றோரின்னோரென அறிவித்தலை . கூற்றிவை என்பது பாடமாயின் அஃது எண்ணிய மூன்றினையுந்! தொகுத்ததாம். கேட்போர் என்றது இன்னார்க்குக் கூறுகின்றது இதுவெனத் தெரித்தலை, களனென்றது இயற்கைப் புணர்ச்சியும் இடந்தலைப்பாடும் முதலியன உணரச்செய்தலை. காலவகை யென்றது முக்காலத்தும் திணை நிகழ்ச்சிக்கண்ணே பொருணிகழ்ச்சியுணரக் கூறலை. பயனென்றது சொல்லிய பொருளாற் பிறிதொன்று பயப்பச்செய்தலை. மெய்ப்பாடென்றது சொற் கேட்டோர்க்குப் பொருள் கட்புலனா தலை. எச்சவகை யென்றது சொல்லப்படாத ஒழிபும் தழிஇக்கொள்ளச்செய்தலை அது கூற்றும் குறியும்? எனவருதலின் வகையென்றார். முன்னமென்றது கூறுவாரையும் கூறக்கேட்டோரையும் குறிப்பான் எல்லாரும் கருதும்படி செய்தலை, பொருள் என்றது புலவன் றான்றேற்றிக் கொண்டு செய்வதோர் பொருண்மையை. துறைவகை யென்றது முதலுங் கருவும் முறைபிறழ்ந்தாலும் இஃது இதன்பாற்படு மென்று ஒருதுறைப்படுத்தற்கேதுவாயதோர் கருவியுளதாகச் செய்தலை, மாட்டென்றது அகன்றும் அணுகியுங் கிடத்த பொருள்களைக் கொண்டுவந்து தொடராகக் கூட்டி முடித்தலை. வண்ண மென்றது ஒருபாவின்கண் ணிகழும் ஒசை விகற்பத்தை. எனாஅ என்ற எல்லாம் எண்ணிடைச்சொல். ஏகாரங்கள் எண்ணுப்பொருட்டு. யாப்பியல் வகையி னாறுதலையிட்ட அந்நாலைந்தும் என்றது யாப்பிலக்கணப் பகுதியால் அவ்வண்ணத் தொடு கூறிய இருபத்தாறும் எ-று. அம்மை ... ... வகுத்துரைத் தனரே என்றது அம்மைமுதலிய எண்வகை வனப்பொடும் முற். 1. எண்ணிய மூன்றாவன: திணை, கைகோள், கூற்று என்பன, 2. மெய்ப்பாடு என்புழி மெய் பொருள்: பாடு - தோன்றுதல் (கட்புலனாதல்). 3. கூற்றும்குறிப்பும்' என்றிருத்தல் வேண்டும். 4. தான் தோற்றிக்கொண்டு செய்தலாவது, செய்யுள் செய்யும் புலவன் தானே பொருள் வகையினைப் புதுவதாகப் படைத்துக்கொண்டு செய்தல். 5. எண்ணுப்பொருள எனத் திருத்துக.