பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

E- MsoHr தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் வெள்ளை யென்பது ஒப்பினான் ஆகிய பெயரென்பது உம் பெற்றாம்.! ‘எறும்பி யளையிற் குறும்பல் தனைய வுலைக்க லன்ன பாறை யேறிக் கொடுவி லெயினர் பகழி மாய்க்கும்” (குறுந்-12) இவ்வாசிரியத்துள் எல்லாவடியும் பாவேறுபட்டு இசை யாமையின் முதற்கணின்ற இயற்சீர் வெள்ளடி நிலைக்குரிமரபின் நின்றதாயிற்று.: "கொலைநவில் வேட்டுவன் கோள்வேட் டெழுந்த புகர்துதல் யானை நுதன்மீ தழுத்திய செங்கோற் கடுங்கணை போலு மெனாஅது நெஞ்சங் கவர்ந்தோ னிரையிதழ்க் கண்ணே’’ என்பது, செய்யுண் முழுவதும் இயற்சீர் வெள்ளடியான் வந்தது. மற்று இயற்சீர்வெள்ளடியல்லது பிறவடி ஆசிரியத்துண் மயங்கப்பெறாதோவெனின், அது நிலைக்குரிமரபின் நில்லாமை யின் உம்மையால் தழிஇக்கொள்ளப்படுஞ் சிறுபான்மையென்பது 3 "பாஅல் புளிப்பினும் பகலிருளினும்” என்றாற்போல்வன.4 1. இயற்சீர் வெள்ளடியான் வரும் அடி ஆசிரியவடியோடுகூடிய கூட்டத்துக்கண் ஆசிரியப்பாவிற்கு உரிமைபூண்டு நிற்கும் நிலையில் நிற்கவும் பெறும் என்றமையால், வெண்பாவினுளாயின் ஆசிரியவடி முழுவதும் தன்தளையொடுவாராதெனவும் முழுவதும் ஆசிரியத் தளைவரின் வெண்பா சிதையும் எனவும், ஆசிரியமாயின் அவ்வாறு சிதையாதெனவும் வேறோசை கலந்தவழி தன்னோசையழிதல் வெண்பாவிற்குப் பெரும்பான்மையென்பது வெண்பா என்ற பெயரினாலேயே பெறப்படுதலின் வெண்பா' என்றது சொல்லின் முடியும் இலக்கணத்தது எனவும், வெள்ளை என்பது வெண்பாவிற்கு ஒப்பினானாய பெயராகலின் அதன்கண் பிறபாவின் அடி விரவின் பளிங்குடன் அடுத்த செம் பஞ்சின் வேற்றுமையால் பளிங்கு வேறுபடுமாறு போன்று வெண்பா சிதையும் எனவும் விளக்குவது இவ்வுரைப்பகுதியாகும். 2. இவ்வாசிரியத்துள் வந்த எல்லாவடியும் பாவேறுபட்டு இசையாது ஒன்றினமையின் இதன் முதற்கண் அமைந்த இயற்சீர் வெள்ளடி பின் வந்த ஆசிரிய அடியுடன் ஒசையொத்து நிற்றற் குரிய மரபினையுடையதாயிற்று. 3. அது (பிறவடி) ஆசிரியத்துள் நிலைக்குரிமரபின் நில்லாமையின் (நிற்கவும் பெறும் என்ற) உம்மையால் சிறுபான்மை தழிஇக் கொள்ளப்படும் என்பது என இயைத்துப் பொருள் கொள்க. 4. பாஅல் புளிப்பினும் பகலிருளினும் என வஞ்சியடி மயங்கியது.