பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா கம் fட தி ை 'உண்டு என்னாது உள' என்றதனான் ஒருபாட்டிற் பல வருதலும் கொள்க. ஆசிரியமென்பது அதிகாரத்தான் வந்தது. உதாரணம் முன்னர்க் காட்டுதும். (4irO) பேராசிரியம் : இஃது. ஐஞ்சிரடியும் வருமாறு கூறுகின்றது. (இ ள்) மேனின்ற அதிகாரத்தாற் கலிப்பாவிற்கு ஐஞ்சிரடி யும் உள (எ - று).2 "வெண்டளை விரவியும் ஆசிரியம் விரவியும்' என்றது என்னையெனின், அவ்வைஞ்சீரடி வெண்பாவோடு விரா யும் ஆசிரியப்பாவோடு விராயும் வருமென்றவாறு. ஈண்டுத் தளையென்றது அப்பாக்களையாதலால் அப்பாக்களோடு விரவு மெனவே, அப்பாக்களை உறுப்பாகக்கொண்டு வரும் பிற செய்யுட் கண்ணும் அவ்வைஞ்சீரடி வருமென்பது பெற்றாம். வெண்டளை யொடு விரவுமெனவே ஐஞ்சீரடி அவற்றுக்கு உரியவல்ல வென்ப தாம். எனவே, கலிப்பாவின்கண் வரும் ஐஞ்சீரடியாயின் அக் கலியோசைக்கு உரிமையுடைத்தென்பதாம்.4 ‘உள வெனவே, ஐஞ்சீரடி கலியினுட் பயின்றுவருமென் பது உம் அல்லனவற்றுட் பயிலாவெனவுங் கொள்க. 1. உண்டு' என்பது உளது' என்னும் பொருள்பட வரும் ஒன்றன் பால் வினைக் குறிப்புமுற்று. 'உள' என்பது உள்ளன' என்னும்பொருள்பட வரும் பலவின்பால் வினைக் குறிப்புமுற்று. மேலைச்சூத்திரத்து ஆசிரியமருங்கின்’ என ஆசிரியப்பா அதிகாரப்பட்டமை யின் இச்சூத்திரவிதியும் ஆசிரியப்பாவிற்குரியதோர் மரபுணர்த்தியது எனக்கொண்டார் இளம்பூரணர். 2. வெண்பாவோடு விரவியும் ஆசிரியப்பாவோடு விரவியும் ஐஞ்சீரடியும் உள எனவே அங்ங்ணம் உளவாதல் அவ்விருபாக்களும் அல்லாத கலிப்பாவின்கண் என்பது தானே பெறப்படும். 3. தளை' என்றது பாக்களையாதலால், அப்பாக்களோடு விரவிவரும் எனவே அப்பாக்களை உறுப்பாகப் பெற்று வரும் பிற செய்யுட்கண்ணும் ஐஞ்சீரடிவரும் என்பது பெறப்படும். 4. ஐஞ்சீரடி வெண்பாவோடும் ஆசிரியத்தோடும் விரவுமெனவே அவ்வடி அப்பாக்களுக்கு உரியதன்று என்பதும் கலிப்பாவின்கண்வரும் ஐஞ்சீரடியாயின் அக்கலியோசைக்கும் உரிமையுடையதென்பதும் நன்குபுலனாகும்.