பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களம் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் 'விராஅய தளையு மொருஉநிலை யின்று (தொல்.செய்-61) எனப்பட்ட கலிப்பாவினோடு இயைபுபட்ட வெண்பாவடியும் அதனோடு இயைபுபட்ட ஆசிரியவடியுங் கூறி, அம்மூன்றனையும் உடன் கூறினானாயினும் ஆண்டுச் சிறந்தவாறே ஈண்டும் அவ்வதி காரத்ததாக நாட்டி, ஐஞ்சீரடியும் உளவென்று ஆண்டு நின்ற கலிக்குக் கூறிய அவ்வடி வெண்டளைவிரவியும் ஆசிரியம்விரவியும் வருமெனப் பிறவற்றுக்குங் கூறினானென்பது.1 'ஐஞ்சீரடி என்பதனை அளவடி மூன்றுபாவிற்கும் உரித்தென்றால் அவ்வப்பாவிற்கு வேறுவேறாகக் கொண்டாற்போல ஐஞ்சீரடியையும் பாத்தோறும் வேறுபடுத்துக்கொள்க.2 உதாரணம்: "தகைமிகு தொகைவகை யறியுஞ் சான்றவரினமாக'(கலி39) எனக் கலிப்பாவினுள் ஐஞ்சீரடி வந்தது. “அரவணிந்த கொடிவெய்யோ னகம்புக்கா னரசவையன் றகற்றி. யே’ எனக் கலியடி வெண்சீரான் வந்தது. கண்டகம் பற்றிக் கடக மணிதுளங்க வொண்செங் குருதியி னோஒ கிடப்பதே கெண்டிக் கெழுதகை யில்லேன் கிடந்துரடப் பன்னா ளழுதகண் ணிர்துடைத்த கை' (யா. வி. 93) என்னும் வெண்பாவினுள் இரண்டாமடி ஐஞ்சீரான் வந்தது. "சிறுசோற் றானு நனிபல கலத்தன் மன்ன்ே பெருஞ்சோற் றானு நனிபல கலத்தன் மன்னே' (புறம் 235) 1. கலிப்பாவிற்குரிய நிலமும் கலித்தளை விகற்பமுங்கூறிய ஆசிரியர், கலிப்பாவினோடு தொடர்புடைய வெண்பாவடியும் அதனோடு தொடர்புடைய ஆசிரியஅடியும் கூறி அம்மூன்றனையும் உடன் கூறினாராயினும் தொடர்ந்து வருவது கலியடியினைப்பற்றிய அதிகார மாதலின், கலிக்குச்சிறப்புடையதாகக் கூறிய ஐஞ்சீரடி அதிகாரப்பட்டமைபற்றி வெண்பாவிற்கும் ஆசிரியத்திற்கும் உரிய தாகக் கூறப்பட்டது என்பது கருத்து. 2. அளவடியால் நடக்கும் ஆசிரியம், வெண்பா, கலி என்னும் மூன்று பாவிற்கும் ஐஞ்சீரடியும் உள' எனப் பொதுவாகக்கூறினாராயினும், அம்மூன்றுபாவுக்கும் உரிய அளவடி பாத்தோறும் வெவ்வேறோசையினதாய் இயலுமாறுபோன்று, மூவகைப் பாக்களிற்பயிலும் ஐஞ்சீரடியும் பாத்தோறும் வேறுவே றோசையினதாய் இயலும் என்பது கருத்து.