பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆ3ள் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் கூறிய இருபத்தாறுந் தொகுத்து முப்பத்துநான்குறுப்பாக்கி இம்முப்பத்துநான்கும் நல்லிசைப்புலவர் செய்யப்படுஞ் செய்யுட்கு உறுப்பாமென்றுகூறி, அங்ங்ணம் இலக்கணமே கூறி விடாதே அவற்றைத் தாஞ் செய்தல் வன்மையினமைந்து சுவடுபட வகுத்த! அவ்வத்துறையெல்லாம் போயினார் என்றவாறு. செய்யுளுறுப்பெனக்கூறி வல்லிதின் வகுத்துரைத்தனரென மாறுக. இருபத்தாறுஎன்றும் எட்டுஎன்றும் இருவகையாற் றொகை கூறியது, இருபத்தாறும் தனிநிலைச் செய்யுட்கு ஒன்றொன்றனை இன்றியமையாவாய் வருதலும், அவ்வெட்டும் பல செய்யுட்டொடர்ந்த தொடர்நிலைச்செய்யுட்கே பெரும்பான்மையும் உறுப்பாய் வருதலும், தனிநிலைக்கண் ஒரோ வொன்றாயும் வருதலும் அறிவித்தற்கு என்க. இவ்வுறுப்புக் குறையாமற் செய்யுட் செய்வார் நல்லிசைப்புலவர் என்பது உம், அடிவரையறை கூறியவற்றிற்கே இவ்விலக்கணமென்பது உம், அடிவரையறையில்லா நூன்முதலிய ஆறற்கும் திணைமுதலிய உறுப்பு ஆகா என்பது உம், அவற்றுள் நூலும் உரையும் ஒழிந்த நான்கும் செய்தார் இசைப் புலவராகார் என்பது உம் உணர்க. இனி நூலும் உரையும் செய்தாரும் நல்லிசைப்புலவர் என்பது பின்னர் அவற்றிற் கிலக்கணம் கூறும்வழி யுணர்க. உறுப்பெனவே உறுப்புடைச் செய்யுளும் அதன்கண் அடங்கும், உறுப்பினது ஈட்டம் முதலாதலின்?. இவ்வாசிரியர் தளையை உறுப்பாகக் கொள்ளாத தென்னையெனின்:- தளையாவது சீரினது தொழிலாய்ப் பாக்களின் ஒகையைத் தட்டு இருசீரிணைந்ததாகும்; அவ்வாறிணைந்த இருசீரினையும் ஆசிரியரெல்லாம் இருசீர்க்குறளடியென அடியாகவே வகுத்துக்கொண்டாராதலின் தளையென வேறோ ருறுப்பின்றாம். அன்றியும், தளையான் அடிவகுப்பாரும் உளராயினன்றே அதனை உறுப்பென்று கொள்ளவேண்டுவது; அங்ங்னம் வகுத்துக் கொள்ளாமையின் உறுப்பென்னாது சீரது தொழிலாய் ஓசையைத் தட்டு நிற்பதொன் றென்றே கொண்டார். அதனை யுறுப்பென் 1. சுவடுபட வகுத்தார்' என முற்றுச்சொல்லாகத் திருத்திக் கொள்க. 2. உறுப்பினது ஈட்டம் முதலாதலின், உறுப்பு எனவே உறுப்புடைச் செய்யுளும் அதன் கண் அடங்கும் என இயைத்துப் பொருள் கொள்க. உறுப்பினது ஈட்டம்-அங்கங்களின் தொகுதி. முதலாதல்-அங்கியாதல்.