பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பாகம் 栎、 என்பன ஐஞ்சீரான் வந்த ஆசிரியவடி. ஆசிரியத்துள் இவ்வாறு இரண்டடி ஒருங்கு நிற்குமென்பது அறிவித்தற்கு ஐஞ்சீரடிக்குச் சிறந்த கலிப்பாவோடு வைத்தான் அதனை முறை பிறழவென்பது. எனவே வெண்பாவிற்கு ஐஞ்சீரடி ஒன்றல்லது வாராதாயிற்று. இக் கருத்தேபற்றி, 'ஐஞ்சீ ரடுக்கலு மண்டில மாக்கலும் வெண்பா யாப்பிற் குரிய வல்ல' ார் பிறருமென் உம்மையான் இகுச் கலியடியாம் “மன்று பார்த்து நின்று தாயைக் கன்று பார்க்கு மின்றும் வாரா? (467) எனக் கொச்சகக்கலியுள் இருசீர் வந்தது. மூன்றுபாவிற்கும் முச்சீரடி உரித்தென்பது முன்னர்ச் சொல்லுதும் 3 வரையாது கூறினமையின் கலிப்பாவிற்காயின் ஐஞ் சீரடி வருங்கால் தளைவிரவியும் விரவாதும் வேண்டியவாறு வரப் பெறுமென்பது 4 (சுங்) நச்சினார்க்கினியம்: இது மூன்றுபாவிற்கும் ஐஞ்சீரடியும் வருமாறு கூறுகின்றது. (இ-ள்.) வெண்பாவோடுங் கலிப்பாவோடும் விராஅயும் ஆசிரியப்பாவோடு விராஅயும் வரும் ஐஞ்சீரடிகளும் உளவென்று கூறுவர் புலவர் எ.று. 1. முறைபிறழ வைத்தலாவது, ஆசிரியம் விரவியும் வெண்டளைவிரவியும்’ என ஆசிரியத்தை முன்னே கூறாது வெண் டளை விரவியும் ஆசிரியம் விரவியும்’ என வெண்பாவை முன்னர்க்கூறி ஆசிரியத்தினைக் கலிக்குக்கூறிய விதியொடு தொடர்புபடப் பின்னே வைத்தல். 2. ஐஞ்சீரடியும்’ என்ற உம்மையால் 3. மூன்று பாவிற்கும் முச்சீரடியுரித்தென்பதனைச் செய்யுளியலிற் பின் ச.அ. ச.கூ, எம். எஉ-ஆம் சூத்திரங்களிற் கூறுவர் ஆசிரியர். 4. வெண்டளைவிரவியும் என வெண்பாவிற்கும் ஆசிரியம் விரவியும்’ என ஆசிரியப்பாவிற்கும் ஐஞ்சீரடிவரும் என வரைந்து கூறிய ஆசிரியர். 'இன்ன தளையுடன் வரும் எனவரைந்தோதாது ஐஞ்சீரடியும் உள' என வரையாது கூறினமையால் கலிப்பாவில் ஐஞ்சிரடிவருங்கால் பிறபாவின் தளைவிரவியும் விரவாதும் வேண்டியவாறு வரப்பெறும் என்பதாம்.