பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொக்குத் துறைபடியுந் தொண்டையஞ்செவ் வாய்மகளிர் - தோண்மேற் பெய்வான் கைக்கொண்ட நீருட்கருங்கண் பிறழ்வ கயலென் றெண்ணி ... மெய்க்கண்ணும் பெய்கலார் மீண்டுகரைக் கேசொரித்து மீள்வார் காணா - ரெக்கர் மணற்கிளைக்கு மேழை மகளிர்த்தே யெறிநீர்க் கொற்கை' எனச் செய்யுள் முழுவதும் அறுசீரடியே வந்தது. “வரைபுரை திரைபோழ்ந்து மணநாறு நறுதுதல் பொருட்டு வந்தோய்” என ஆசிரியத்தளையானும் அறுசீரடி வந்தது. மற்றுத் தளையென்றேர்துவது கட்டளையடிக்கென்றிரால் ஈண்டுத் தளையென்றதென்னையெனின், அவ்வரையறை 1. ஒருவன் சொல்லுவது: அறுசீரடி வருங்கான் முதற்கண் நேரடி துாங்கிப் பின் இருசீரொடு தொடுத்தல் வேண்டும் என்னும் அஃது இச்சூத்திரத்திற்கேலாது; நேரடிமுன் அறுசீர் வரினென்பது பதின் சீரடியாமாகலின்; அல்லதுாஉங் குறளடி தூங்கியுஞ் சிந்தடி தூங்கியும் அறுசீரடி வருதலின் அஃது அமையாதென்பது. என்னை, 1. அவ்வரையறை என்பது, அடிவரையறை என்றிருத்தல் வேண்டும். தளையென்றதென்னை யெனின், அடி வரையறை. என முற்றுப்புள்ளியிட்டு முடிக்க. 'ஒருவன் சொல்வது: என்பதனை வேறு தொடராகக் கொள்ளுதல் வேண்டும். 2. அறுசீரடிவருங்கால், முதற்கண் நாற்சீரடியாய் நின்று, பின்னர் இரு சீருடன் தொடுத்தல் வேண்டும் என்று கூறுவான். என்னும்-என்று கூறுவான்: செய்யுமென்னும் வினைமுற்று. -