பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

it :ళీణిir தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் 'வாராது நீத்தகன்றார், வருமாறு பார்த்திருந்தார், வடிக்கண் போல” என்றவழி இருசீரான் யாத்தமையின் அது துரக்கெனப்படாது; “செங்காந்தள் கைகாட்டுங் காலஞ், சேட்சென்றார் வாரார்கொல் பாவம்' என முச்சீரான் யாத்தமையின் அதுவுந் தூக்கெனப்படாது; அறுசீரடியே தூக்காகக் கொண்டமையின், நேரடிமுன் இரு சீரடி வந்ததென்றது உம் பிழைக்குமென்பது.1 (சுச) நச்சினார்க்கினியம் : இஃது எய்தியதன்மேற் சிறப்புவிதி; கலிக்கு ஐஞ்சீரடி யெய்தியதன் மேலே அறுசீரடியும் எய்துவித்தலின். (இ-ள்.) நேரடி முன்னே எது நாற்சீரடிக்கு முன்னும் பின்னும். அறுசீர் . ... ... ... வரூஉம் எ-து அறுசீரடி தனக்குரிய வெண்டளையோடன்றி ஆசிரியத்தளையோடு வழங்கப்பெற்று நடக்குங் கலியினுள். எ-று. முன் என்றதனை இடமுன்னாகவுங் காலமுன்னாகவுங் கொள்க. தளையொடும் என்ற உம்மையாற் றனக்குரிய வெண்சீர்வெண்டளையான் வருதலும் மயங்கிவருதலும் பெற்றாம். உ-ம். முன்னைத் தஞ்சிற்றின்... புகாரேயெம்மூர்'2 'கரைபொரு கான்யாற்றங் கல்லத ரெம்முள்ளி...... வாரலையோ' இவை மூன்றாம்டி நேரடியாக முன்னும் பின்னும் அறு 1. நாற்சீரடிமுன் அறுசீரடிவரின் எனப் பொருள் கொள்ளின் அங்ங்ணம் வந்து முடிவது பதின் சீரடியாதல் வேண்டும். அன்றியும் இருசீரடி மூன்றடுக்கியும் முச்சீரடி இரண்டடுக்கியும் அறுசீராய் வருதலுண்டு. அவ்வாறு வருவன தம்முள் தொடர்பின்றித் துணிக்கப்பெறுதலால் அளவும் சிந்தும் குறளும் ஆகத் தனித் தனியே துணிக்கப்பெறும், அவற்றை அறுசீரடி யென்றல் பொருந்தாது. இரு சீரடியும் முச்சீரடியும் நாற்சீரடியும் என இடையிடையே தனித்தனியடிகளாகத் துணிக்கப்பெறாது ஆறுசீர்களும் அடிமுழுவதும் தொடர்புறவரும் அடியே அறுசீரடியெனப்படும் என்பதாம், 2. இப்பாடலில் வரும் 'தன்மைமடவார் தளர்ந் துகுத்த வெண்முத்தம்’ என்னும் மூன்றாமடியினை நாற்சீரடியாகவே பேராசிரியரும் எடுத்துக் காட்டியுள்ளார். இவ்வடி பிற்கால யாப்பிலக்கணவுரைகளில் தன்மை மடவா! தளர்ந்துகுத்த வெண்முத்தம் தயங்கு கானல் என அறுசீரடியாகக் காட்டப் பெற்றுளது. இவ்வடியில் தயங்கு கானல் எனவரும் இருசீரும் பிற்காலத்திற் சேர்க்கப்பெற்றன எனக் கருதவேண்டியுளது.