பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா சுக. fis- és Jim ஏகாரம் பிரிநிலை. உ-ம். 'கவிரிதழ் கதுவிய துவரித ழரிவையர் கலிமயிற் கணத்தொடு விளையாட' என எழுசீரடி முடுகிவந்தது. இவை கலிக்கும் பரிபாடற்கும் உரிய. முடுகாத எழுசீரடி வந்துழிக் காண்க.1 ஆய்வுரை : இஃது எழுசீரடிக்குரியதோர் இயல்பு கூறுகின்றது. (இ.ஸ்) எழுசீரால் வரும் அடி முடுகியற்கண் நடக்கும். முடுகியலில் நடத்தலாவது விரைந்த நடையினதாய்த் தாள அறுதிப்படச் செல்லுதல், శ్రీig fi_ முடுகியல் வரையார் முதலிரண் டடிக்கும்.2 இளம்பூரணம்: என்-எனின் எய்தியதன்மேற் சிறப்புவிதி உணர்த்துதல் துத லிற்று, (இ-ள்.) மேற்சொல்லப்பட்ட ஐஞ் சீரடிக்கும் அறுசீரடிக்கும் முடுகியல் நீக்கப்படாதென்றவாறு.3 (சுங்) உதாரணம் முன்னர்க் காட்டுதும். பேராசிரியம் : இஃது, எய்தாத தெய்துவித்தது; எழுசீரடியேயன்றி ஐஞ் சீரடியும் அறுசீரடியும் அராகந் தொடுக்குமென்றமையின். (இ-ஸ்) எழுசீரடிக்கு முன்னர் இடைநின்ற ஐஞ்சீரடியும் அறுசீரடியும் முடுகியல் நீக்கார். (எ-று)4. 1. இவ்வுரைப்பகுதி பேராசிரியர் உரையைத் தழுவியமைந்ததாகும். 2. முதலீரடிக்கும் எனப் பாடங் கொள்வர் பேராசிரியரும் நச்சினார்க் கினியரும். 3. இங்கு முதலிரண்ட்டி என்பன ஐஞ்சீரடியும், அறுசீரடியும். இவ்வடிகள் முடுகியவாய் வருதல் நீக்கப்படா என்றவாறு, 4. முதல் ஈரடிக்கும் முடுகியல் வரையார் என இயைத்துப் பொருள் கொண்டார் பேராசிரியர், இங்கு முதலீரடி என்றது, எழுசீரடிக்கு முதற்கண் உள்ள அறுசீரடி, ஐஞ்சீரடி என்னும் இரண்டினையும்.