பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூஉம் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் அவற்றுக்குச் செய்யுள் : காரெதிர் கலியொலிகடியிடி யுருமி னியங்கறங்க நேரிதழ் நிரைநிரை நெறிவெறிக் கோதைய ரணிநிற்ப(கலி.105) என்பது ஐஞ்சீரடி முடுகிவந்தன. "மலர்மலி புகலெழ வலர்மலிர் மணிபுரை நிமிர்தோள் பிணைஇ' (கலி, 102) என்பது அறுசீரடி முடுகிற்று. முதல் ஈரடிக்கும் என்ற உம்மை எச்சவும்மை. அவ் வும்மை யால் நாற்சீரடியும் இத்துணைப் பயிலாது முடுகுமென்பது.1 “புரிபு புரிபு புக்க பொதுவரைத் தெரிபு தெரிபு குத்தின வேறு” (கலி. 103) என வரும் . 'இரிபெழு பதிர்பதிர் பிகழ்ந்துடன் பலர் நீங்க வரிபரி பிறுபிறுபு குடர்சோரக் குத்தித்தன் கோடழியக் கொண்டானை யாட்டித் திரிபுழக்கும் வாடில் வெகுளி யெழிலேறு கண்டை பிஃதொன்று' என்பதனுண் முடுகியலடி இரண்டும். வந்தன. (கலி. 104) மற்று இவற்றை அராகமென்னாமோவெனின், அதனைப் பரிபாடற்கு உறுப்பென்றமையாற் பிறவடியொடு தொடராவுற்று வரவேண்டும். இஃது அன்னது அன்றென்பது.? எழுசீரடியிற் சிறுவர்வினவாகலான் ஐஞ்சீரடியினையும் அறுசீரடியினையும் 1. முதலீரடிக்கும் என்ற உம்மையால், ஐஞ்சீரடி அறுசீரடி என்னும் இரண்டு மன்றி நாற்சீரடியாகிய அளவடியும் முடுகியலாய்ச் சிறுபான்மை வரும் எனக்கொண்டார் பேராசிரியர். ஐஞ்சீரடியும் அறுசீரடியும் போன்று முடுகியலாய் அளவடி வருதல் என்பது பெரும்பான்மையன்று: சிறுபான்மையே அருகி வரும் என்பார் நாற்சீரடியும் இத்துணைப் பயிலாது முடுகும்' என்றார். 2. விரைந்த நடையினதாகிய அராகம் என்பது, பரிபாடற்கு உறுப்பாய் வருதலின் அது பிறவடியொடு தொடர்பற்று வரும்; முடுகியலாகிய இது அத்தன்மையதன்றிப் பிறவடியுடன் தொடர்ந்து வரும். இவ்விரண்டற்கும் உள்ள வேறுபாடு இதுவாகும். பிறவடியொடு தொடராவுற்றுவரவேண்டும் என வரும் இவ்வுரைத் தொடரைப் பிறவடியொடு தொடர்பற்று வரவேண்டும்' என்றோ, பிறவடியொடு தொட்ராவற்று வரவேண்டும்' என்றோ திருத்திப் பொருள் கொள்ளுதல் பொருத்தமுடையதாகும்,