பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா க 呜5荔” பார்க்குச் சீரான் அடிவகுத்தல் குற்றமாம். தொல்காப்பியரோடு ஒருசாலை மாணாக்கராகிய காக்கைபாடினியாரும் உறுப்பென்னார்; பின்றோன்றிய காக்கைபாடினியார் முதலியோர் கொள்வர்: அது பொருந்தாது. இச்சூத்திரத்துட் கூறிய முறையே முறையாமாறு வருகின்ற சூத்திரங்களின் பொருட்கிடையான் உய்த்துணர்க. வனப்பெட்டும் தனித்தனி வருமாறும் தம்முள் இயைபுடைமையும் ஆண்டுணர்க. இவ்வுறுப்பினை ஆசிரியன்குறியும் உலகத்தார்குறியுமாகக் கொள்க. இவற்றை உயிரில்லாத கலவையுறுப்புப் போற் கொள்க.1 ஆய்வுரை : முன்னர் உணர்த்தப்பட்ட அகமும் புறமுமாகிய பொருண்மை யெல்லாவற்றிற்கும் இடமாகிய செய்யுளது இலக்கணம் உணர்த்தினமையால் இது செய்யுளியல் என்னும் பெயர்த்தாயிற்று. எழுத்ததிகாரத்திலும் சொல்லதிகாரத்திலும் உலக வழக்கிற்குஞ் செய்யுள் வழக்கிற்கும் வேண்டும் விதிகளை விர விக் கூறிப் பொருளதிகாரத்தில் இதுகாறும் பெரும்பாலும் உலக வழக்கிற்கு வேண்டிய விதிகளையே கூறிவந்த ஆசிரியர், அப்பொருள்பற்றிச் செய்யுள் இயலுமாறு கூறக்கருதி, இவ்வதிகாரத்துட் குறிக்கத் தகுந்த செய்யுளிலக்கணமெல்லாம் இவ்வியலில் தொகுத்துணர்த்துகின்றார். எனவே பொருளதிகாரத்தின் முன்னுள்ள ஏழியல்களும் உலக வழக்கும் செய்யுள் வழக்குமாகிய அவ்விரண்டற்கும் பொதுவென்பதும், செய்யுளியலாகிய இது, செய்யுட்கேயுரித்தென்பதும் நன்கு பெறப்படும். இவ்வியலில் அமைந்த சூத்திரங்களை இளம்பூரணர் 235-ஆகவும், பேராசிரிபரும் நச்சினார்க்கினியரும் 243-ஆகவும் பகுத்து உரை வரைந்துள்ளார்கள். இனி, செய்யுளியலாகிய இதனை யாப்பதிகாரம் என வேறோர் அதிகாரமாக்கிக் கூறுவாருமுளர். அங்ங்னங்கூறின் வழக்கதிகாரம் என வேறொன்று கூறுதல் வேண்டுமாதலானும், எழுத்துஞ் சொல்லும் பொருளும் என மூன்றற்கும் மூன்றதிகாரமாக்கி அதிகாரம் ஒன்றற்கு ஒன்பது இயல்களாக ஆசிரியர் 1. நச்சினார்க்கினியம் தரும் இவ்விளக்கம் பேராசிரியர் உரையை அடியொற்றியமைத்ததாகும்.