பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா சுச lH- B - B. பெரும்பான்மைத்தாகலின் மூவகையடி யென வகையென்னும் அடையடுத்துக் கூறினானென்பது. அல்லதுாஉம் எழுசீரடி விலக்கா னன்றே, அதனை ஆசிரியமருங்கினும் வெண்பாமருங்கினும் மயங்குமென்ப தின்மையினென்பது.1 இனி, அறுசீரடி ஆசிரியத்தளையோடும் வருமென்றது (46) அகவலோசைக்கு உரித்தென்றமையானும், "வெண்டளை விரவியும் ஆசிரியம் விரவியும் ஐஞ்சீரடியும் வரும்” (63) என்றமையானும் அவற்றை அளவடியுடன் எடுத்தோதி விலக்கினான். மூவகை அடியுமென்றது. ஐஞ்சீரடி முதன்மூன்று மெனப்படுமென்பார், அளவடி முடுகுதல் ஆசிரியத்திற்கும் உரிமை யின் அது வரையறையின் றென்றலும் ஒன்று; அது. 'திருமழை தலைஇய விருனிற விசும்பின்' (பத்துப்-மலைபடு. 1) என வரும். அதற்கு முடுகியற்றன்மை இன்றென்றது கருத்து. வஞ்சிப்பாவிற்குக் குறளுஞ் சிந்தும் அல்லது இன்மையின் இவ் வாராய்ச்சி இன்றென்பது. எனவே, ஆசிரியத்தளையோடு முடுகிய லடியினைக் கலியடி யென்றும் முடுகாத அறுசீரடி ஆசிரியத்தளையோடு தெறிபெற்று வருவதற்கும் கலிப்பாவிற்குச் சிறுபான்மையான் வருமென்ப துரஉஞ் சொல்லப்பட்டது 2 அல்லாதார் ஐஞ்சீரடி முதலிய மூன்றுங் 1. மூவகையடியாவன முதலீரடி எனப்பட்ட ஐஞ்சீரடியும் அறுசீரடியும் முதலீரடிக்கும்’ என்ற உம்மையால் தழுவிக்கொள்ளப்பட்ட நாற்சீரடியும் ஆகிய மூன்றும் எனவும், எழுசீர்டி ஆசிரியமருங்கினும் வெண்பாமருங்கினும் மயங்குமெனக்கூறாமையான் அதனை ஆசிரிய மருங்கினும் வெண்பா மருங்கினும் வாராது என விலக்கவேண்டுவதில்லையெனவும் கொள்வர் பேராசிரியர். இனி, மூவகையடியும் என்றது. ஐஞ்சீரடி, அறுசீரடி எழுசீரடி ஆகிய மூன்றடியும் எனக் கொள்வோர், அளவடி முடுகுதல் ஆசிரியத்திற்கும் உண்மையால் அது வரையறையின்று என்பர். 2. ஆசிரியத் தளையொடு முடுகியலும் பெற்ற அடியினைக் கலியடி யெனவும், முடுகாத அறுசீரடி ஆசிரியத் தனையொடு தெறிபெற்று வருதற்கும் சிறுபான்மை கலிப்பாவின்கண் வருதற்கும் உரியது எனவும் கொள்வர் பேராசிரியர். ஐஞ்சீரடி அறுசீரடி எழுசீரடியாகிய மூன்றும் கலிக்குரிய ஆசிரியம் வெண்பாவென்னும் பிறபாக்களுக்கு உரியன அல்ல என விதிப்பதே இச்சூத்திரம்