பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

fH- FR_ Fo தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் கலிக்குரிய, பிறபாவிற்கு உரியவல்ல என்றற்கு வந்தது இச்சூத்திர மென்ப; அற்றன்று; அங்ங்ணம் கூறில் தாம் வேண்டும் ஐஞ்சீரடி ஆசிரியத்துள்ளும் புகாதென்று மறுக்க. 'முன்னுதலில’ வென்றது யாண்டுமாகா தென்றவாறு. இவ்விலக்கணமெல்லாம் மேற்காட்டிய செய்யுளுட் கண்டு கொள்க. (க எ) நச்சினார்க்கினியம் : இது முடுகியல் இன்ன பாவிற்கு உரித்தென்கிறது. (இ-ள்.) தனியேவரும் ஆசிரியப்பாவினும் வெண்பாவினும் முடுகியலடி மூன்றும் வரப்பெறா எ-று. மூன்றென்றது, நாற்சீரடியும் ஐஞ்சீரடியும் அறுசீரடியுமான அடிகளை எழுசீரடி முன்னுதலின்று என்றதனால் முற்கூறிய மூன்றடியானும் வரும் முடுகியலோடு விராஅய்த்தொடர்ந்து ஒன்றாய்க் கலிக்குறுப்பாய்வரும் ஆசிரியமும் வெண்பாவுமுள என்று கொள்க. உ-ம் 'நெறியறி செறிகுறி புரிதிரி பறியா வறிவனை முந்துறி இத் தகைமிகு தொகைவகை யறியுஞ் சான்றவ ரினமாக வேய்புரை மென்றோட் பசலையு மம்பலு மாயப் புணர்ச்சியு மெல்லா முடனிங்கச் சேயுயர் வெற்பனும் வந்தனன் பூவெழி லுண்கணும் பொலிகமா வினியே’ (கலி, குறிஞ்சி-ச) இஃது அறுசீரடியும் ஐஞ்சீரடியும் முடுகி ஒரு தொடராய்வந்த ஆசிரியம். தகைவகை மிசைமிசைப் பாயிய ரார்த்துட னெதிரெதிர் சென்றார் பலர்” (கலி, முல்லை.உ) எனவும், முன் பக்கத் தொடர்ச்சி எனக்கூறுவாரும் உளர். அங்ங்னம் கூறின், ஆசிரியத்துள் ஐஞ்சீரடி வருதலுண்டெனத் தொல்காப்பியனார் விதித்த வண்ணம் ஆசிரியத்துள்ளும் ஐஞ்சீரடி புகாது என்ற நிலையேற்படும். எனவே இச்சூத்திரத்திற்கு அவர்கள் கூறும் பொருள் பொருந்தாது என மறுக்க என்பதாம். 1. முன்னுதல் - முற்பட நெருங்குதல். நெருங்குதல் இல எனவே முடுகியலுடைய அம்மூவகையடிகளும் ஆசிரியத்திலும் வெண்பாவிலும் யாண்டும் வருதலில்லை என்பதாம்.