பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா சுச ங் உரு 'இரிபெழு பதிர்பதிர் பிகந்துடன் பலர் நீங்க வரிபரி பிறுபிறுபு குடர்சோரக் குத்தித்தன் கோடழியக் கொண்டானை யாட்டித் திரிபுழக்கும் வாடில் வெகுளி யெழிலேறு கண்டை யிஃதொன்று வெருவெரு துரம மெடுப்ப வெகுண்டு திரிதருங் கொல்களிறும் போன்ம்' (கவி, முல்லை ச) எனவும் இவை நாற்சீரடி முடுகியலோடொன்றாய் வந்த வெண்பா. இதனுள் ஐஞ்சீரடியும் வந்தது. மேனிலை மிகலிகலின் மிடைகழி பிழிபுமேற் சென்று வேனுதி புரைவிரற் றிறனுதி மருப்பின் மாறஞ்சான் பாணிற வெள்ளை யெருத்தத்துப் பாய்ந்தானை நோனாது குத்து மிளங்காரித் தோற்றங்காண் பான்மதி சேர்ந்த வரவினைக் கோள்விடுக்கு நீனிற வண்ணனும் போன்ம்' (கலி, முல்லை-க.) என ஐஞ்சீரடி முடுகியலோ டொன்றாய் வந்த வெண்பா. "மலர்மலி புகலெழ வலர்மலிர் மணிபுரை நிமிர்தோள் பிணைஇ யெருத்தோ டிமிவிடைத் தோன்றினன் றோன்றி வருத்தினான் மன்றவிவ் வேறு” (கலி, முல்லை.உ) இஃது அறுசீரடி முடுகியலோ டொன்றாய் வந்த வெண்பா. இவற்றை அராக மென்னாமோ வெனின் - என்னாம்; அராக. மாவது பிறிதொன்றனோடு கூட்டி ஆற்றுவியாமற் றானேபோய் அற்று நிற்பதாம். அது பரிபாடற் செய்யுளுறுப்பென்பர்; இது பிறிதொன்றனோடு கூட்டி ஆற்றுவித்துக்கோடற் குரித்தாம்! இவ்வேறுபாடு அறிக. ஆய்வுரை : இது, முடுகியல் இன்ன பாவிற்கு உரித்து என்கின்றது (இ ள்) முடுகியலாகி வரும் மூவகையடிகளும் ஆசிரியப். பாவினும் வெண்பாவினும் பொருந்தி நில்லா எ-று. முன்னுதல் - பொருந்தி நிற்றல் இங்கு மூவகையடி’ எனப்பட்டன அறுசீரடி, ஐஞ்சீரடி என்னும் இரண்டுடன் முதலீரடிக்கும்’ என்றவும்மையால் 1. ஆற்றுவித்தலாவது, பின்வரும் உறுப்பினுடன் இயைபுபடுத்தல்.