பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A.உகின் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் தழுவிக்கொள்ளப்பட்ட நாற்சீரடியும் ஆகிய மூன்றும் எனவும் எழுசீரடி ஆசிரியத்தும் வெண்பாவினும் மயங்கும் எனக் கூறாமையால் அதனையெடுத்துக்கூறி விலக்க வேண்டுவதில்லை யெனவும் இச்சூத்திரவுரையிற் பேராசிரியர் கூறியுள்ளமை முன்னர்க் கூறப்பட்டது. 'நாற்சீர் கொண்டது அடியெனப்படும்’ எனக்கூறி அதனை எழுத்தெண்ணி ஐவகையடிகளாகப் பகுத்துணர்த்திய தொல். காப்பியனார், வஞ்சியடியே இருசீர்த் தாகும்’, ‘முச்சீரானும் வருமிடனுடைத்தே’, 'ஐஞ்சீரடியும் உளவென மொழிப’, 'அறுசீரடியே ஆசிரியத் தளையொடு நெறிபெற்றியலும், "எழுசீரடியே முடுகியல் நடக்கும்’ என நாற்சீரல்லாத ஏனைச் சீர்வகையடிகளையும் குறிப்பிட்டு விதி கூறுதலால், எழுத்தளவு: பற்றி வகுக்கப்படும் கட்டளையடிக்கேயன்றிப் பெருவழக்குடைய சீர்வகையடிக்கும் இவ்வியலில் இலக்கணங் கூறியுள்ளார் தொல்காப்பியனார் என்பது நன்கு புலனாகும். சுரு ஈற்றயல் அடியே ஆசிரிய மருங்கில் தோற்ற முச்சீர்த் தாகு மென்ப. இனாம்பூரணம் : என் - எனின். இதுவும் ஆசிரியப்பாவிற்குரியதோர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ஸ்.) ஆசிரியப்பாவின் ஈற்றயலடி தோன்றுமிடத்து முச்சீர்த்தாகவும் பெறும் என்றவாறு. உதாரணம் : 'முதுக்குறைந் தனளே முதுக்குறைந் தனளே மலையன் ஒள்வேற் கண்ணி முலையும் வாரா முதுக்குறைந் தனளே” (சிற்றெட்டகம்) இதனுள் ஈற்றயலடி முச்சீரான்1 வந்தது. (சுரு) சுக இடையும் வரையார் தொடையுணர்ந் தோரே. இளம்பூரணம் : என்-எனின். இதுவுமது. இவ்வாறு ஈற்றயலடி மட்டும் முச்சீர்த்தாய் ஏனையடிகள் நாற். சீரவாய் வரும் ஆசிரியப்பா நேரிசையாசிரியம் என வழங்கப்பெறும். 2. தொடையுணர்வோரே என்பது பேராசிரியர், நச்சினார்க்கினியர் உரைகளிற் கண்டபாடம்.