பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

班、<9円 தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவள்ம் 'நீரின் றண்மையுந் தீயின் வெம்மையுஞ் சாரச் சார்ந்து தீரத் தீருஞ் சார னாடன் கேண்மை சாரச் சாரச் சார்ந்து தீரத் தீரத் தீர்பொல் லாதே' (யா.வி.253) என்பதனுட் சார னாடன் கேண்மை’ எனவுஞ் சாரச் சாரச் சார்ந்து' எனவும் முச்சீரடி இரண்டு வந்தன. ஏகாரம் பிரிநிலை. மற்று, நரந்த நாறுந் தன்கையாற் - ----- புலவுநாறு மென்றலை தைவரு மன்னே' (புறம்.235) என முச்சீரடி இடையும் ஒன்று வந்ததாலெனின், தோற்ற' மென்றதனான் எருத்தடி முச்சீராய காலத்துக் குட்டம்பட்டு இனிது விளங்கும். இடையிடை ஒன்று வருதலும் உண்டாயினும் அத்துணை இனிதன்று அது வென்பது கொள்க.1 "பெரியகட் பெறினே' (புறம் 235) என இருசீரடி வந்ததாலெனின், அதனைச் சொற்சீரடி யென்று &ᏊᏈ☽ ❍Tö . "உப்பிலாஅ அவிப்புழுக்கல்-கைக்கொண்டு பிறக்கு நோக்காது” (புறம் 363) எனவுங் காட்டுப. இவை வஞ்சியடியெனப் படுமென்பது. வெண்சீரான் வஞ்சியடி வருமோவெனின், வாரா; வஞ்சிச்சீர் விரவினல்லதென்பது. 'உப்பிலாஅ அவிப்புழுக்கல்” என்பதோவெனின், அது மற்றை இருசீரடியொடு கூட்டத்துக் காட்டலானும் வஞ்சியடி போன்றது. (காக) 1. எருத்தடி - ஈற்றயலடி குட்டம்படுதல் - குறைதல். கேவலின் ஈற்றயலடி முச்சீராய்க்குறைந்து ஒலிக்கவே அஃது அப்பாவின்கண் உள்ள ஏனைய நாற்சீரடிகளிலும் சிறப்புடையதாய் இனிது விளங்கும். முச்சீரடி அகவலின் இடையிடையே ஒன்றுவரின் அவ்வளவு இனிமையுடையதாய்த் தோன்றாது. 2. சொற்சீரடியாவது, சொல் தானே சிராந்தன்மையைப்பெற்று அடியாய் நிற்பது.