பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி ஆதி: தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் நூல் செய்த முறையோடு மாறுகொள்ளுமாதலானும் அது பொருந்தாது என மறுப்பர் பேராசிரியர். இந்நூற்பா செய்யுளுறுப்புக்கள் எல்லாவற்றையும் தொகுத்து உணர்த்துகின்றது. (இ - ள்.) மாத்திரை, எழுத்தியல், அசைவகை, சீர், அடி, யாப்பு, மரபு, தூக்கு, தொடைவகை, நோக்கு, பா, அளவியல், திணை, கைகோள், கூற்றுவகை, கேட்போர், களன், காலவகை, பயன், மெய்ப்பாடு, எச்சவகை, முன்னம், பொருள், துறை வகை, மாட்டு, வண்ணம் என வரும் யாப்பிலக்கணப் பகுதியாகிய இருபத்தாறும், அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு எனவரும் வனப்பு எட்டும் ஆக இங்குக் கூறப்பட்ட முப்பத்து நான்கும் நல்லிசைப்புலவர் கூறும் செய்யுளுக்கு உறுப்பாம் என்றவாறு. இதன்கண் மாத்திரை முதல் வண்ணம் ஈறாக முற்கூறப்பட்ட இருபத்தாறும் ஒவ்வொரு செய்யுட்கும் இன்றியமையாதனவாய் வரும் உறுப்புக்கள் எனவும், பிற்கூறப்பட்ட அம்மை முதலிய எண்வகை வனப்புக்களும் செய்யுட்கள் பல தொடர்ந்தமைந்த தொடர்நிலைப் பனுவலுக்கே பெரும்பான்மையும் உறுப்பாகவும் தனிநிலைச் செய்யுட்களில் ஒரோவொன்றாகவும் வருவன எனவும் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் தெளிவாகக் குறித்துள்ளனர். செய்யுளுக்குரிய உறுப்புக்கள் எல்லாவற்றையும் தொகுத்துக் கூறுவதாகிய இச்சூத்திரத்தில் தளை என்பது தனியுறுப்பாக எடுத்துரைக்கப்படவில்லை. தளையாவது, நின்ற சீரின் ஈற்றசையுடன் வருஞ்சீரின் முதலசை ஒன்றியும் ஒன்றாமலும் தம்முள் தளைத்து (கட்டப்பட்டு) நிற்றல். சீரது தொழிலாகிய இத்தளையைச் செய்யுளுக்குரிய தனியுறுப்பாகக் கொள்ளாது, சீராலாகிய அடியின் அமைப்பாகவே கொண்டு இலக்கணங் கூறினார் தொல்காப்பியனார். இவ்வாறன்றிச் சிறுகாக்கை பாடினியார் முதலிய பிற்கால யாப்பிலக்கண ஆசிரியர்கள் தளையென்பதனைச் செய்யுளுக்குரிய தனியுறுப்பாகவே கொண்டனர். இருசீர் இணைந்தது குறளடியாம் என்பது ஆசிரியர் தொல்காப்பியனார்க்கும் பிற்கால யாப்பிலக்கண நூலாசிரியர்க்கும் ஒப்ப முடிந்ததாகும். இனி, சீரிரண்டு தளைத்துநிற்றல் தளையென்னுந் தனியுறுப்பாமெனக் கொள்ளின் இவ்விருசீர்