பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Hå-sh-go- தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் உதாரணம் : 'அரிமான் இடித்தன்ன” என்னும் பாலைக்கலியுள், சுரிதகம் "முளைநிரை முறுவல் ஆயத்துள் எடுத்தாய்ந்த இளமையுந் தருவதோ இறந்த பின்னே (கலித் கரு) என ஈற்றயலடி நாற்சீரான் வந்தது. (க எ) பேராசிரியம் : இது, கலிப்பாவிற்கு அளவடியும் நெடிலடியும் அதனி னிறந்த அடியும் உரிமை கூறி, இனிச் சிந்தடியும் உரித்தென்கிறது. (இ-ள்) கலிப்பாவினுள் முச்சீரடி நிரம்பவும் நிற்கும் (எ-று)! 'நிறைய நிற்றல்' என்பது அச்செய்யுண் முழுவதும் அவ் வடியே வருதலாம், உம்மையான் ஒரு செய்யுணிறைய வாராது ஒன்றும் இரண்டும் பலவுமாகி அம்முச்சீரடி வருதல் பெருவர விற்றென்பது. தாம்குறைந்த அடியாதலிற் கலிப்பாவிற்கு உறுப்பாகிய சின்னத்திற் குறைய நிற்கும் இயல்பினவாயினும், நிறைய நிற்றலுடைய கொச்சகத்துளென்றவாறு 2 “செய்தானக் கள்வன் மகன்' (கலி 51) எனவே வெண்கவியுள் இறுதிக்கணல்லது வாராது “நின்கண்ணாற் காண்பென் மனயான்” (கலி-39) என்பது இடைவந்தது. எண் உறுப்பின்கண் இரண்டும் நான் கும் வருமாறு கண்டு கொள்க. “நீர்வரக் கண்கலுழ்ந் தாங்குக் கார்வரக் கண்டனங் காதலர் தேர்வரக் கண்டில மன்னோ பீர் வரக் கண்டனந் தோளே” என முச்சீரடி ஒரு செய்யுள் நிறையவும் வந்தவாறு. (6ΤΟ) 1. முரற்கை' என்பது கவிப்பாவுக்குரிய பெயர். முரலுதல் - இன்னோசை பொருந்த ஒலித்தலாதலின் துள்ளலோசை பொருந்திய கலிப்பாவிற்கு முரற்கை' என்பது காரணப்பெயர் என்பது முன்னர்க் கூறப்பட்டது. கலி' என்பதும் அப்பொருளில் வழங்கும் காரணப்பெயரேயாகும். 2. முச்சீரடி அளவடியை நோக்கக் குறைந்தனவாய்க் கலிப்பாவின் உறுப்பாகிய சின்னம் என்னும் எண்ணாய்க் குறையநிற்பனவாயினும் கொச்சகத்துள் நிறைய நிற்றலுடைய என்பார், முச்சீர் முரற்கையுள் நிறையவும் நிற்கும்’ என்றார் ஆசிரியர்.