பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற். கூஉதின் னுடற்றியோர் நாடே’ (புறம்-4) என மண்டிலவாசிரியத்தா னிற்றது. "செந்துரக் கியற்றே யென்ற மாட்டேற்றானே, 'ஈற்றய வடியே யாசிரிய மருங்கிற் றோற்ற முச்சீர்த் தாகு மென்ப” (தொல்-செய்சுரு) எனவும், 'இடையும் வரையார் தொடையுணர் வோரே' (தொல்-செய் கண்க ) எனவும் எய்திய விதி ஈண்டும் எய்துவிக்க. “அணையை யாகன் மாறே” (புறம்-4) என முச்சீரடி இடைவந்தது. 'இழைபெற்ற பாடினிக்குக் குரல்புணர்சீர்க் கொளைவல்.பாண் மகனும்மே யெனவாங் கொள்ளழற் புரிர்ந்த தாமரை வெள்ளி நாராற் பூப்பெற் றிசினே'. (புறம்-11) 1. "வஞ்சியடியே இருசீர்த்தாகும் , முச்சீரானும் வருமினுடைத்தே என வஞ்சிப்பாவிற்கு அடியுரிமை கூறப்பட்டது. அம்முறைப்படி வஞ்சிப்பாவின் இறுதி அவ்விரு சீரடியும் முச்சீரடியுமாய் முடிவதனைவிலக்கி ஆசிரியத்திற்குரிய சீராலுந் தளையாலும் முடியும் என அறிவுறுத்துவது இச்சூத்திரமாகும். 2. வஞ்சித்துக்கு-வஞ்சிப்பாவின் இறுதி. செந்துக்கு-ஆசிரியப்பாவின் இறுதி.