பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - து; நிலைக்கொரா விலக்கம்:போன்றன மாவே, யெறியதத்தா னிடங்காட்டக் கறுழ்பொருத செவ்வாயா னெருத்துவவ்விய புலிபோன்றன களிறே, கதவெறியாச் சிவந்துராஅய் நூதிமழுங்கிய வெண்கோட்டா லுயிருண்ணுங் கூற்று வினைமாதோ யனையை யாகன் மாறே தாயி றுரவாக் குழவி போல வோவாது கூஉநின் னுடற்றியோர் நாடே' (புறம் - க.) என முச்சீரடியிடைவந்து மண்டலவாசிரியத்தானிற்றது. "அரிமயிர்த் திரண்முன்கை' என்னும் பாட்டினுள் இழைபெற்ற பாடினிக்குக் குரல்புணர்சீர்க் கொளைவல்.பாண் மகனும்மே எனவாங் கொள்ளழற் புரிந்த தாமரை வெள்ளி நாராற் பூப்பெற்றிசினே' (புறம் - க.க) இஃது ஈற்றயலடி முச்சீர்த்தாகிச் செந்தூக்கியற்றாயிற்ற வஞ்சிப்பா? : தனிச்சொற் பெறுமென்று பின்னுள்ளோர் கூறிய நூல்கள் சான்றோர் செய்யுட் காகாவென்று கொள்க. ஈற்றடி வரைந்தோதவே, இடையினெல்லாவடியும் வரப்பெறுமாயிற்று. 1. இவ்வஞ்சிப்பாவின் இறுதி, தாயில் துவாக் குழவி போல ஒவாது கூஉநின் னுடற்றியோர் நாடே' என நிலைமண்டில ஆசிரியத்தால் முடிதலின் மண்டலவாசிரியத்தான் இற்றது என்றார். மண்டலம் - நிலைமண்டிலம்: எல்லாவடியும் நாற்சீராய் வரும். அகவற்பா. இறுதல் - முடிதல். 2. செந்தூக்கு என்றது, எல்லாவடிகளும் நாற்சீரானியன்று ஈற்றயலடி யொன்றும் முச்சீர்த்தாய் வரும் நேரிசை ஆசிரியப்பாவினை.