பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிசம் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் உறைகவுள் வேழமொன் றுண்டென்றா ளன்னை மறையறநீர் வாழிய மையிருங் குன்று' என மண்டலித்து வந்தது. 'அட்டாலும் பால்சுவையிற் குன்றா தளவளாய் நட்டாலு நண்பல்லார் நண்பல்லர் கெட்டாலு மேன்மக்கண் மேன்மக்க ளேசங்கு கட்டாலும் வெண்மை தரும்’ இது மூதுரை. "நாளுமொன் lயாப் பகலும் பகாஅ நண்புடைக் கேளிர்ப் பிரிவித் தகாஅ னிவனென்னுஞ் சொல்லுமித் நான்கும் வகாஅ தொழிக வெமக்கு” இது சான்றோரெல்லாரும் பிறைதொழுததேனும், பாட்டாய் வருதலின் மந்திரமாகாது.? இனி, 'வஞ்சி வெளிய குருகெல்லாம் பஞ்சவ னான்மாடக் கூடலிற் கல்வலிது சோழ னுறந்தைக் கரும்பினிது தொண்டைமான் கச்சியுட் காக்கை கரிது’’ “கறைப்பற் பெருமோட்டுக் காடு கிழவோட் கரைத்திருந்த சாந்துதொட் டப்பேய் மறைக்குமா மாட்டாது மற்றுந்தன் கையைக் குறைக்குமாங் கூர்ங்கத்தி கொண்டு’ இவை ஒளவையுங் காரைக்காலம்மையுங் கூறியன 3 1. மண்டலித்து வருதலாவது, எல்லாவடிகளும் நாற்சீரடிகளாய் ஒத்துமுடிதல். - இப்பாடல் சான்றோர் எல்லோரும் கூடிப் பிறைதொழும் நிலையிற் பாடுதற்குரிய தோத்திரப் பாடலாகும். இது மந்திரம் போன்று அமைந்ததாயினும் அடிவரையறையுடைய பாட்டாகி வருதலின் அடி வரையில்லாத மந்திரமாகாது என்றார். 2 3. ‘வஞ்சிவெளியகுருகெல்லாம்' என்ற பாடல் ஒளவையார் பாடியது எனவும் கறைப்பற் பெருமோட்டு என்ற பாடல் காரைக் காலம்மையார் பாடியது எனவும் முறையே கொள்க. 'வஞ்சி வெளிய' என்ற பாடலின் மூன்றாமடியில் சோழனுறந்தைக் கரும் பெளிது’ என்றிருத்தலே பொருட்பொருத்தமுடையதாகும்.