பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா உ ஆதி 95) இணைப்பைக் குறளடியென வேறோர் உறுப்பாகக் கொள்ளுதல் பொருந்தாது. அன்றியும் தளைபல அடுத்து நடப்பதே அடியெனக் கொள்ளும் பிற்கால யாப்பிலக்கண ஆசிரியர்க்குத் தாம் உறுப்பெனக் கொண்ட தளையால் அடிவகுப்பதன்றிச் சீரால் அடிவகுத்தல் குற்றமாய் முடியும். ஆதலால் சீரது தொழிலாகிய தளையென்பதனைச் செய்யுளுக்குரிய தனிவேறுறுப்பாகக் கொள்ளுதல் கூடாதென்பது பேராசிரியர் நச்சினார்க்கினியர் முதலியோர் துணிபாகும். உ. அவற்றுள், மாத்திரை வகையும் எழுத்தியல் வகையும் மேற்கிளந் தனவே யென்மனார் புலவர். என்பது சூத்திரம். இளம்பூரணம் : (இ - ள்.) என்-எனின். மேற்சொல்லப்பட்டவற்றுள் மாத்திரை வகையு மெழுத்தியல் வகையு மேல் எழுத்ததிகாரத் துச் சொல்லப்பட்டன வென்று சொல்லுவர் புலவரென்றவாறு. ஈண்டு வேறுபாடில்லை யென்றவாறு.? அவையாவன குற்றெழுத் தொருமாத்திரை, நெட்டெழுத்து இரண்டு மாத்திரை ; உயிரளபெடை மூன்றுமாத்திரை குற்றிய லிகரமுங் குற்றியலுகரமும் ஆய்தமு மெய்யும் ஒரோவொன்று அரை மாத்திரை, ஒற்றளபெடை ஒரு மாத்திரை: ஐகாரக் குறுக்கம் ஒரு மாத்திரை, மகரக்குறுக்கங் கால்மாத்திரை: ஏறிய உயிரினளவே உயிர்மெய்க்களவு.3 1. மேற்கிளந்தன்ன' என்பது பேராசிரியருரையிற்கண்ட பாடம். 2. மாத்திரையளவும் எழுத்தியல்வகையும் மேற்கிளந்தனவே என்றமையால் மேல் எழுத்ததிகாரத்திற்கூறப்பட்ட அவற்றினியல்பு செய்யுளியலாகிய இவ்விடத்தும் வேறுபடுதலில்லையென்பதாம். 3. இவ்வுரைத் தொடரையடியொற்றி எழுத்துக்களின் மாத்திரை வகுத் துரைப்பது, மூன்றுயி ரளபிரண்டாநெடி லொன்றே குறிலோ டையெளக் குறுக்க மொற்றள பரையொற் றிஉக் குறுக்க மாய்தங் கால்குறள் மஃகா னாய்த மாத்திரை. (நன், எழுத்தியல்-43) எனவரும் நன்னுாற் சூத்திரமாகும். இளம்பூரணர் செய்யுளியலில் எழுத்துக்களைப் பகுத்தாற்போலவே யாப்பருங் கலக்காரிகையாசிரியரும்,