பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உம் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் எழுத்தியலாவது-உயிரெழுத்து, மெய்யெழுத்து, சார்பெழுத் தென மூவகைப்படும். உயிரெழுத்து குற்றெழுத்து, நெட்டெழுத்து, அளபெடையென மூவகைப்படும். மெய்யெழுத்து வல்லினம், மெல்லினம், இடையினமென மூவகைப்படும். சார்பெழுத்து, குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தமென மூவகைப்படும். மெய்யினுட் சிலவும் ஆய்தமும் அளபெடுக்கப் பெறும். குற்றெழுத்து அ, இ, உ, எ, ஒ. நெட்டெழுத்து ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள. அளபெடை ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ, ஐ.இ, ஒஒ, ஒள உ. வல்லினம் க ச ட த ப ற. மெல்லினம் ங் ஞ ண ந ம ன. இடையினம் ய ர ல வ ழ ள. குற்றியலுகரமாவது நெட்டெழுத்தின் பின்னரும் மூன்றெழுத்து முன்னான மொழியினும் வல்லெழுத்தை ஊர்ந்து வந்த உகரம். நாகு-நாக்கு; காசு-காச்சு: காடு - காட்டு; காது - காத்து; காபு - காப்பு; காறு - காற்று என இந்நிகரன. குற்றியலிகரமாவது இவ்வுகரந்திரிந்து மகர மூர்ந்து யகர ' குறினெடி லாவி குறுகிய மூவுயி ராய்தமெய்யே மறுவறு மூவின மைதீ ருயிர்மெய் மதிமருட்டுஞ் சிறுநுதற் பேரமர்க் கட்செய்ய வாயைய நுண்ணிடையாய் அறிஞ ருரைத்த வளவு மசைக்குறுப் பாவனவே. (யா. கா-} எனப் பகுத்துக் கூறியுள்ளார். குற்றியலுகரம் பற்றியும் ஆய்தம்பற்றியும் குற்றியலிகரம் பற்றியும் விளக்கும் நிலையில் இளம்பூரணருரையிற்கானப்படும் இவ்வுரைத் தொடர்களை முறையே யடியொற்றியமைந்தன, நெடிலோ டாய்த முயிர்வலி மெலியிடைத் தொடர்மொழி யிறுதி வன்மையூ ருகரம் அஃகும் பிறமேற் றொடரவும் பெறுமே” (எழுத்தியல் - 39) எனவும், "யகரம் வரக்குற ளுத்திரி யிகரமும் அசைச் சொன்மியாவி னிகரமுங் குறிய' (எழுத்தியல் - 38) எனவும், ' குறியதன் முன்ன ராய்தப் புள்ளி உயிரொடு புணர்ந்தவல் லாறன் மிசைத்தே' (எழுத்தியல் - 35) எனவும், 'தற்சுட் டளபொழி யைமூவ ழியும் நையும் ...... ...... ...... ל (எழுத்தியல் - 40) எனவும், ணன முன்னும் வஃகான்மிசையு மக்குறுகும்' (எழுத்தியல் - 41) எனவும் வரும் நன்னுாற் சூத்திரங்களாகும்.