பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா எ.க. க. ருக. "இயல்' என்றதனாற் கட்டளை வெண்பாவே வரல் வேண்டு வதில்லை எனக்கொள்க. பண்புற என்றதனான் மூன்றடியின் இழியிற் பண்புபட வாரா வெள்ளைச்சுரிதக மெனவுங் கொள்க.2 (எக எள) நச்சினார்த்திசிையம் : இரண்டும் உரையியைபுநோக்கி ஒன்றாகக் கூறிற்று. இது கலிக்குஞ் சிந்தடிகூறி ஈறுவருமாறு கூறுகின்றது. (இ.ஸ் ) கலிப்பா எழுசீரிறுதியாகி ஆசிரியத்தாலும் வெண்பா வினிறுதியாலும் முடியும். எ-து. "எழுசீரிறுதி யாசிரியம்’ எனவே, ஆசிரியவடி பலவும் வந்து எருத்தடி முச்சீராகவே வருமென்பது உம், வெண்பாவியல்’ எனவே, கட்டளைவெண்பாவானும், சீர்வகைவெண்பாவானும் வந்து ஈற்றடி முச்சீரான் வருமென்பது உம் பெற்றாம். உ.ம். "அரிதாய வறனெய்தி யருளியோர்க் களித்தலும்" (பாலைக்கலி-கC) என்னும் கலியிறுதியின் இனைநலமுடைய’ என்னும் ஆசிரியம் ஈற்றடி நாற்சீரும் அயலடி முச்சீருமாக எழுசீரான் இ ‘மணிநிற மலர்ப்பொய்கை' (மருதக்கவி-ரு) என்னுங் கலியினிறுதி "மெல்லியான் செவிமுதன் மேல்வந்தான் காலைபோ லெல்லாத் துயிலோ வெடுப்புக நின்பெண்டி ரில்லி னெழிஇய யாழ்தழிஇக் கல்லாவாய்ப் பாணன் புகுதராக் கால்' என வெண்பாவியலான் இற்றது. இது கலிக்குறுப்பாய் வருதலின் ஆசிரியத்தளையும் வந்தது. இஃது ஒத்தாழிசைக்கும் பெரும்பான்மைவிதி.ே பண்புற என்றது விசேடமிக முடியுமென்றவாறு; 1. வெண்டாவென்னாது வெண்பாவியலினும் என்றதனால், கட்டளையடியால் இயன்ற வெண்பாவே வருதல் வேண்டும் என்பதில்லை, சீர் வகையடி யால் வரும் வெண்பாவும் கலிக்குஈறாம் என்பது கொள்ளப்படும். 2. கவிப்பாவின் இறுதிக்கண் வருதற்குரிய வெள்ளைச்சுரிதகம் மூன்றடியிற் குறையின் சிறப்புப் பொருந்த வாராது என்பதாம். 3. இஃது ஒத்தாழிசைக்குப் பெரும்பான்மை விதி' என்றிருத்தல் வேண்டும் என்பது, 'ஈண்டு விதந்து ஒதியனவெல்லாம் பெரும்பான்மையும் ஒத்தாழிசைக்கலிக்கெனவுணர்க எனவரும் பேராசிரியருரையால் உய்த்துணரப்படும்.