பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா கை: திரிசொல் திசைச் சொல் வடசொல்லானும், எழுவகை வழும்ை படாமல் புணர்ப்பது என்றவாறாம்.: அவற்றுள் இயற்சொல் மரபாவது சொல்லதிகார இலக்கணத் தோடு பொருந்துதல். திரிசொல் மரபாவது தமிழ்நாட்டகத்தும் பலவகை நாட்டினும் தத்தமக்குரித்தாக வழங்கும் மரபு. திசைச்சொன் மரபாவது செந்தமிழ்சூழ்ந்த பன்னிருநிலத்தினும் வழங்கும் மரபு. வடசொன் மரபாவது திரிந்தவகையாகிய சொல்மரபு. யாதானும் ஒருசெய்யுட் செய்யுங் காலத்துப் பொருள்உணர்த்துஞ் சொற்கள் இவையாதலின் இவை ஒருபொருட்குரித்தாகிய ஆண் பெயரும் பெண்பெயரும் குழவிப் பெயரும் முதலாயின. பிறபொருட்கண் வாராமையான், அவற்றை அவ்வம்மரபினாற் கூறுதலும், ஒருமை பன்மை மயங்காமையும் பெயரும் வினையும் முடிவுபெறக் கூறுதலும் வேண்டுதலின், இவ்விலக்சணமுங் கூறல் வேண்டிற்று. (5 ஆண்} Gr. s g irsotřvas vie : இது, நிறுத்தமுறையானே மரபினை விளங்கக் கூறுகின்றது. (இ-ள்) மரபேதானும்-அங்ஙனங் கூறப்பட்ட மரபு தானும்: ஏகாரம் பிரிநிலை; உம்மை இறந்தது தழlஇயிற்று; மேல் எழுவகையான் யாக்கப்படுதன் மரபென்றமையின், மரபேதானு 1. செய்யுளிட்டச் சொற்களாகிய இயற்சொல் இரிசொல் இசைச்சொல் வடசொல் என்னும் நால்வகைச் சொற்களாலும் செய்யுட் செய்யுங்காலத்து எழுவகை வழுவும் படாமல்ஒரு பொருட்குளித்தாகிய ஆண்மை பெண்மை இளமை முதலிய மரபு பற்றிய சொற்களை அவ்வம்மாபு திரியாதவாது யாப்பின் வழி அமைத்தலே மரபு என்னும் செய்யுளுறுப்பாகும் என்பதாம். 2. சொல்லதிகார இலக்கணத்தொடு பொருந்துதல் இயற்சொல் மரபெனவும், தமிழ்நாட்கத்தும் பலவகை நாட்டிலும் சொற்கள் தத்தமக்குரித்தாக வழங்கிவரும் முறைமை திரிசொல் மரபெனவும், செந்தமிழ் சூழ்ந்த பன்னிருநிலத்தினும் தத்தமக் குரிய பொருளில் வழங்குதல் திசைச்சொல் மரபெனவும், ஆரியமொழியின் சிறப்பெழுத்துக்கள் தமிழொலிக்கேற்பத் திரிந்த வகையாகிய சொல்மரபு வடசொல் மரபெனவும் இளம்பூரணர் தரும் விளக்கம் தமிழ்மரபு கெடாதவாறு செய்யுள் செய்வார்க்கு இன்றியமையாததாகும். 3. தானும் என்புழி உம்மை முற்கூறிய யாப்பேயன்றி மரபும்' எனப் பொருள் தருதலின் இறந்தது தpஇய எச்சவும்மையாகும்.