பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா எஅ க.ாது 한 எனவே அகவுதலில்லாத ஒசையாம். இதனைப் பிற நூலாசிரியர் செப்பவோசை என்ப. அகவுதல் என்பது ஒரு தொழில். அத்தொழில் இதன்கண் இல்லாமையின் 'அஃதன்று’ என்றார். உதாரணம் : 'பொன்னார மார்பிற் புனைகழற்காற் கிள்ளிபேர் உன்னேனென் றுரழுவக்கை பற்றினேற்-கன்னோ மனனோடு வாயெல்லாம் மல்குநீர்க் கோழிப் புனல்நாடன் பேரே வரும்' (முத்தொள். கசெ) இது மேற்சொல்லப்பட்டதுபோல இசைகுறித்து வருதவின்றிச் செப்புதலாகிய வாக்கியம்போன்ற ஒசைத்தாகி வந்தவாறு காண்க. (எ.அ). இது. வெண்பாவாமாறு உணர்த்துதல் நுதலிற்து. (இ.ஸ்) மேற் கூறிய அகவலோசையன்றிச் செப்பிக் கூறும் ஒசையெல்லாம் வெண்பா வெனப்படும். (எ-று}. யாப்பென்றதனான் அப்பாக்கள் செய்யுண் முழுவதும் ஒருங்கு தpஇக் கிடக்குமென்பது கொள்க. அகவிக் கூறாது, ஒருவத் கொருவன் இயல்புவகையானே ஒரு பொருண்மை கட்டுரைக் குங்கால் எழும் ஒசை செப்பலோசை யெனப்படும். இவ்விரண்டு மல்லது வழக்கினுள் இன்மையான் அதாஅன்றெனவே அதனிலக் கணம் போல்வதாயிற்று. } سجيوشه( நச்சினார்க்கினியம் : இது வெண்பாவிற்குரிய செப்பலோசை கூறுகின்றது முன் ப: செப்பலோசையென வழங்குவர். இசைகுறித்துவருவது அகவலோசை. வெண்பாவோசையாகிய இது செப்புதலாகிய சொற்றொடர் போன்ற ஒசையுடையதாகி வருதலின் செப்பலோசையென்னும் பெயருடையதாயிற்று. 1. அகவிக்கூறாது-அழைத்துக்கூறாது. 2. அகவலும் வெண்பாவும் ஆகிய இன்விாண்டோசையுமல்லது உலக. வழக்கினுட் பிறிதொன்றின்மையால் அகவலோசையல்லாத தெல்லாம் வெண்பா வமைப்பமாகிய செப்பலோசையுள் அடங்கிவிடும் என்பார், அவ்வகவல் அல்லாதது வெண்பாயாப்பு’ என அவ்வகவலோடு சமமாய் எதிர்திற்கும் வெண்பாவின் இலக்கணம் உணர்த்தினார்.