பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா உ உரு இனி, ஒருசாரார் மாத்திரையென்றது எழுத்தல்லோசை யாகிய குறிப்பிசை கொண்டானென்பர்.1 அக்குறிப்பிசை உறுப் பாக வருஞ் சான்றோர் செய்யுள் யாண்டுங் காணாமையின் நாம் அது வேண்டாமாயினாம். சிறுபான்மை ஒரோவழி வரினும் அத்துணையானே அஃது இன்றியமையாத உறுப்போடு எண் ணப்படாதென மறுக்க, உறுப்பன்று என்றார்க்குக் குறிப்பிசை யாண்டுப் பெறுதுமெனின், "அசையுஞ் சீரு மிகையொடு சேர்த்தி" (தொல் - செய். 11) என்புழிப் பெறுதுமென்பது.? இனி, எழுத்தியல் வகையும் மேற்கிளந் தன்ன வென்ட தனையும் எழுத்திலக்கணத்திற் றிரியாமற் செய்யுள் செய்க வென்றவாறென்பவெனின், அஃதே கருத்தாயிற் சொல்லோத்தி னுள்ளும் எழுத்திலக்கணமாகிய மயக்கமும் நிலையும் முதலாகிய இலக்கணத்தில் திரியாமற் சொல்லாராய்தல் வேண்டுமெனவும், இவ்வதிகாரத்துள்ளும் எழுத்தியல் வகையுஞ் சொல்லியல் வகையும் மேற்கிளந்தன்ன வெனவுஞ் சூத்திரஞ் செய்வான்மன் ஆசிரியனென மறுக்க." 1. மாத்திரை என்பதனை எழுத்தல்லோசையெனக்கொண்ட ஆசிரியர் பிற்கால யாப்பிலக்கண ஆசிரியர்களுள் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை, ஒருசாரார் மாத்திரையென்றதனான் எழுத்தல்லோசையாகிய குறிப்பிசை கொண்டானென்பர் எனவரும் இவ்வுரைத்தொடர் தொல்காப்பியவுரை. யாசிரியர்களுள் ஒருசாரார்கூறிய உரை விளக்கத்தை யுளத்திற்கொண்டு பேராசிரியரால் எழுதப்பெற்றதென்பது, நாம் அது வேண்டாமாயினாம்' எனப்பின்வரும் அவரது உரைத்தொடரால் உய்த்துணரப்படும். 2. குறிப்பிசையாவன எழுத்தொலியல்லாத முற்கு, வீளை, இலதை, அநுகரணம் முதலாகவுடையன. இவற்றை அசையுஞ்சீரும் இசையொடு சேர்த்திக்கொள்ளும் முறைமையினை, யாப்பருங்கல ஆசிரியர் எழுத்தல் லிசையை அசைபெறுத் தியற்றல் (யாப்பருங்கலம் சூ-95) என்ற தொடரால் ஒழிபியலிற். குறித்துள்ளமை இவ்வுரைப் பகுதியோடு ஒப்பவைத்து உணர்தற்குரியதாகும். 3. மேல் எழுத்ததிகாரத்திற் கூறப்பட்ட எழுத்திலக்கணத்தில் திரியாமற் செய்யுள் செய்க" என்பதே இச்சூத்திரக்கருத்தாயின் சொல்லதிகாரத்திலும் இவ்வாறு எழுத்திலக்கணம் சிதையாமற் சொல்லாராய்தல் வேண்டும் எனவும் இப்பொருளதிகாரத்திலும் எழுத்திலக்கணமுஞ் சொல்லிலக்கணமும் மேற்கிளந்தன்ன எனவும் தொல்காப்பியனார் சூத்திரஞ் செய்திருப்பர். அங்ங்ணம் சூத்திரஞ்செய்யாமையின், மாத்திரையளவும் எழுத்தியல்வகையும் மேற்கிளந்த வகையாற் பிறழாமற்கொள்ளத்தக்கன என்பதே இச்சூத்திரத்தின் பொருள்ா தலின், எழுத்திலக்கணத்தில் திரியாமற்செய்யுள் செய்க என்பது இச்சூத்திரத்தின் கருத்தன்றாம், என மறுக்கும் முறையில் அமைந்தது இவ்வுரைப் பகுதியாகும்.