பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీy தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் மற்று, மாத்திரையளவைக்கும் இலக்கணங் கூறுமின் எனின், அதுவும், "அசையுஞ் சீரு மிகையொடு சேர்த்தி” (323) என் புழி, வல்லோராறெனப் பாவொடுபொருந்தக் கூறு மென்பது; அல்லதுTஉம் மாத்திரையினை அளவைப்பட நிறுத்துக என்ப தோரிலக்கணமாதலின் இங்ங்ணம் வரையறை யுடைத்தாக நோக்கிச் செய்யுளுறுப்பென்றானா மென்பது. மற்று மாத்திரையினை அளவைப்பட நிறுத்தாக்காற் படுங் குற்றம் என்னையெனின், அற்றன்று; "வரகு வரகு வரகு வரகு” என்னும் அடியினைப், "பனாட்டுப் பனாட்டுப் பனாட்டுப் பனாட்டு” என நிறுத்தின் அது மாத்திரைவகையாற் சிதைவு பட்டதாம். 'அம்ம வாழி கேளாய் தோழி' என்றாம், பின்னர் நின்ற இருசீரும் நெடிலாதல் இன்னாதென்று ந் தோழியெனப் பின்னர் நின்ற சீரைக் குறுக்கினவழி இன்னோ சைத்தாமென்றும் அவ்வாறே செய்யுள் செய்ப, பிறவுங் கொச் சகக்கலியுள்ளும் ஒழிந்தனவற்றுள்ளும் இவ்வாறே கண்டு கொள்க. நச்சினார்க்கினியம் இது நிறுத்தமுறையானே மாத்திரையும் எழுத்தியலும் உணர்த்துகின்றது. (இ - ள்) அவற்றுள் மாத்திரையளவும் என்பது, முற்கூறிய வற்றுள் மாத்திரையைச் செவிகருவியாக உணர்ந்துகொள்ளும் நிலையும். எழுத்தியல் வகையும் என்பது, முற்கூறிய முப்பத்து மூன்றெழுத்தும் யாப்பிலக்கணத்திற்குப் பதினைந்துபெயரவாய் நடக்குங் கூறுபாடும். மேற்கிளந்தன்ன என்மனார் புலவர் என்பது, எழுத்தோத்திற்கூறிய இலக்கணத்திற் பிறழாமை வருமென்று கூறுவர் புலவர். (எ - று.) 1. மாத்திரையளவு என்பது, செய்யுட்களில் எழுத்தொளியினை அளவைப் பட நிறுத்துக என்பது ஓரிலக்கணம். பாவுக்கு மாத்திரையளவாகிய வரையறை வேண்டப்படுதல்பற்றி அதனைச் செய்யுட்குரிய உதுப்பாகக் கொண்டார் தொல்காப்பியனார். இவ்வியளில் அசையுஞ் சீரும் இசையொடு சேர்த்தி’ எனவரும் சூத்திரத்தில் இசையொடு சேர்த்தி வகுத்துணர்த்துதல் வல்லோர் ஆறு எனப் டானென்னும் உறுப்பொடு பொருந்த மாத்திரையளவுக்குத் தொல்காப்பியனார் இலக்கணங்கூறியுள்ளார் என்பது பேராசிரியர் தரும் விளக்கமாகும்.