பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா அக அ ஆ ஆ. 'பொன்னேர் மேனி நன்னிறஞ் சிதைத்தோர்’ 'உருவக் கடுந்தேர் முருக்கிமற் றத்தேர்' இவை பொழிப்பெதுகை, 'உள்ளார் கொல்லோ தோழி முள்ளுடை' பறம்பிற் கோமான் பாரியும் பிறங்குமிசை (சிறுபாணாற்றுப்படை} ‘வாண்மாய் குருதி களிறுழக்கத் தாண்மாய்ந்து' (களவழி - க} இவை ஒரூஉவெதுகை. 'இன்ன ரென்னா தின்பம் வெஃகி" "குன்றங் கொன்ற குன்றாக் கொற்றத்து’ (திருமுருகாற்றுப்படை) இவை கூழையெதுகை. பொன்னேர் மேனி துன்னினர்' கொண்டுபா ராட்டுவார் கண்டிலர்கொல் மண்டி’ (நாலடி, து உய்தன்மை) இவை மேற்கதுவாயெதுகை. 'உள்ளி னுள்ளம் வேமே யுள்ளாது" (குறுந்தொகை-கoஉ) 'படியை மடியகத் திட்டா னடியினான்’ (நான்மணி, கடவுள்வாழ்த்து) இவை கீழ்க்கதுவாயெதுகை. கன்னிப் புன்னை யன்னந் துன்னும்’ இன்றுகொ லன்றுகொ வென்றுகொ லென்னாது (நாலடி, அறன் வலியுறுத்தல்) இவை முற்றெதுகை. இனிக்கலிக்கு . 'அடங்காதார் மிடல்சாய யமரர்வந் திரத்தலின் எறிதிரை செறிகையான் மிகவாங்கி மீதோங்கி" இவை இணையெதுகை. 'பெருவரை யுறழ்மார்பிற் றிருவோங்கு கரியோனை' இது பொழிப்பெதுகை.