பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா உ 岛塑~每矿 ஈண்டு அளவென்றது எழுத்திலக்கணத்தில் எழுத்திற்குக் கூறிய மாத்திரைகள் தத்தம் ஒசைகளைப் புலப்படுத்தி நிற்குமாறு தொடர்புபடுத்தி விராஅய் நிற்பச்செய்யும் நிலையை அளந்து கோடலை என்றது 'அளபிறந் துயிர்த்தலு மொற்றிசை நீடலும்’ (தொல். எழுத். நூன். 33) என்னுஞ் சூத்திரத்தானும் குறுமையு நெடுமையு மளவிற் கோடலின்' (தொல். எழுத். மொழி. 17) என்னுஞ் சூத்திரத்தானும் செய்யுட்குரிய ஒசைதருமெனக் கூறிய நெட்டெழுத்துக்களும் ஒற்றெழுத்துக்களும் தத்தம் பாவின் ஒசையை வேறுபடத்தந்து நிற்கும் என்றதாம். இவ்விரண்டு சூத்திரத்தோடும் மாத்திரையளவை மாட்டெறிந்தார். இவன் அளந்த அளவு நன்று என்றாற்போல, அளவு அளவு:தொழின் மேனின்றது. இதனாலல்லது செய்யுள் வேறுபாடு உணரலா காமையிற் சிறப்புறுப்பாக ஏனையுறுப்புக்களின் முன்னே கூறினார்.2 உதாரணம் : "வருவர்கொல் வயங்கிழாஅய் வலிப்பல்யான் கேஎளினி எனவும், (கலி, பாலை. 10) "கடியவே கணங்குழாஅய் காடென்றா ரக்காட்டுள்' (கலி. பாலை. 10) 1. அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும் (நூன்மரபு - 33) என வரும் எழுத்ததிகாரச் சூத்திரம் இசைநூற்கு வருவதோர் இலக்கணம் ஆமாறு கூறி, அவ்விலக்கணம் செய்யுளியலை நோக்கி இயற்றமிழுக்கும் கொள்கின்றது என்பதும், குறுமையும் நெடுமையும் (மொழி மரபு-17) எனவரும் சூத்திரம் மேற்கூறிய சூத்திரத்திற்குப் புறனடையாய் அதன்கண் நிகழ்வதோர் ஐயம் அகற்றுகின்றது என்பதும், எழுத்ததிகாரத்திலமைந்துள்ள இவ்விரு சூத்திரங்களாலும் செய்யுட்குரிய ஓசைதரும் எனக் கூறப்பட்ட நெட்டெழுத்துக்களும் ஒற்றெழுத்துக்களும் தத்தம் பாவின் ஒசையை வேறுபடத் தந்து நிற்கும் எனக் கூறிய தொல்காப்பியனார் மேற்குறித்த எழுத்ததிகாரச் சூத்திரங்கள் இரண்டி னோடும் இச்செய்யுளியலிற் கூறப்படும் மாத்திரையளவினை மாட்டெறிந்து கூறினார் என்பதும், மாத்திரையளவு' என்புழி அளவு என்றது. அளத்தலாகிய தொழில்மேல் நின்றது என்பதும் நச்சினார்க்கினியர் கருத்தாகும். 2. எழுத்துக்களின் ஒசையினைச் செவிகருவியாக அளத்தலாகிய மாத்திரையளவினாலன்றிச் செய்யுளின் பாவேறுபாடு உணரலாகாமையின் மாத்திரை யளவினைச் சிறப்புறுப்பாகக் கொண்டு ஏனையுறுப்புக்களின்முன்னே கூறினார்.