பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா உ இ.ஆ. பெறுதும். இவற்றுட் குறிலும் நெடிலும் குற்றுகரமும் அசைக் குறுப்பாம். ஒற்றடுத்த அசைகள் வேறுபடாமையின் ஒற்று அசைக் குறுப்பாகா : ஒற்றளபெடைக் குறுப்பாம். நெடிலும், அளபெடையிரண்டும், உயிரும், உயிர்மெய்யும், மூவினமும், ஐகார ஒளகாரக் குறுக்கமும் தொடைக்குறுப்பாம். குறிலும், நெடிலும், அளபெடையிரண்டும், மூவினமும், ஆய்தமும் வண்ணத் திற்குறுப்பாம். இவற்றை இயற்கையெழுத்துஞ் சார்பெழுத்தும் என இரண்டாகவும் வகுப்பர்.1 ஆய்வுரை : இது, மேற்குத்திரத்து நிறுத்தமுறையாலே முதற்கண் நின்ற மாத்திரையும் எழுத்தியலும் உணர்த்துகின்றது. (இ-ஸ்) மாத்திரையளவும் எழுத்தியல் வகையும் ஆகிய இரண்டும் மேல் எழுத்ததிகாரத்திற்கறிய இலக்கணத்திற்பிறழா. மற் செய்யுளுக்கு உறுப்பாய் வரும் என்பர் ஆசிரியர். (எ-று.) “மாத்திரை’ என்பது, எழுத்திற்குச் சொல்லிய மாத்திரைகளைச் செய்யுள் பொருந்தியமைந்த அளவு ஆகும். மாத்திரையினது அளவு மாத்திரை யெனப்பட்டது. எழுத்திலக்கணத்தில் எழுத்திற்குக் கூறிய ஒலித்தற் காலஅளவாகிய மாத்திரைகள் செய்யுளில் ஒசை நலம் சிதையாதபடி தத்தம் ஒசைகளைப் புலப்படுத்தி அளவுபெற ஒலித்து நிற்றலே மாத்திரையென்னும் உறுப்பாகும். மாத்திரையளவாகிய இதனாலல்லது செய்யுட் களின் ஒசை வேறுபாடு உணரலாகாமையின் ஏனையுறுப் புக்களினும் மாத்திரையளவினைச் சிறப்புறுப்பாக முற்கூறினார். இனி, எழுத்தியல்வகை என்றது, மேல் எழுத்ததிகாரத்திற் கூறப்பட்ட எழுத்துக்களைச் செய்யுளுக்கு ஏற்புடையவாக இயற்றிக்கொள்ளுங் கூறுபாடு. அஃதாவது மேல் எழுத்ததி. காரத்தில் தமிழுக்குரிய முப்பத்து மூன்றெழுத்துக்களையும் உயிர், குறில், நெடில், மெய், வலி, மெலி, இடை, குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என இயல்பு வகையாற் பத்தும் உயிர்மெய், உயிரளபெடை எனக்கூட்டவகையால் இரண்டும், ஐகாரக்குறுக்கம் ஒளகாரக்குறுக்கம் எனப் போலி வகையால் இரண்டும், யாழ்நூலாகிய இசைநூன்முறையால்வரும் ஒற்றிசை 1. சிறப்பெழுத்து, உறுப்பெழுத்து என இருவகையாகத் தொகுத்துரைப்பர் யாப்பருங்கலவிருத்தி ஆசிரியர்.