பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடம் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் நீளுதல் ஒன்றும் ஆகப் பதினைந்து பெயரளவாய்ப் பகுத்துரைத்த வகையாகும். இவற்றுடன் மகரக்குறுக்கம் ஒன்றுகூட்டிப் பதினாறெழுத்தெனக் கொள்ளுதலும் உண்டு. ங் குறிலே நெடிலே குறிலிணை குறில்நெடில் ஒற்றொடு வருதலொடு மெய்ப்பட நாடி நேரும் நிரையு மென்றி சிற் பெயரே. இாைம்பூரணம் : என்பது நிறுத்தமுறையானே அசையாமாறு உணர்த்துதல் துதலிற்று. (இ - ள்.) குறிலும் நெடிலுங் குறிலிணையுங் குறினெடிலுந் தனியே வரினும் ஒற்றொடு வரினும், ஆராயுங்காலத்து நேரசையும் நிரையசையுமா மென்றவாறு. இதுவு மொரு நிரனிறை: முந்துற்ற நான்கு மொருபொருளாய்ப் பின்னிரண்டாகி வரினும், முற்பட்டவையும் இரண்டாகப் பகுத்தலான். கோழி வேந்தன், என நான்குநேரசையும், வெறி சுறா நிறம் குரால், என நான்கு நிரையசையும். (ங்) இது, நிறுத்த முறையானே அசைவகை யுணர்த்துதல் துதலிற்று. (இ - ள்.) குறிலும் நெடிலுந் தனித்து வந்துங் குறில் இரண்டு) இணைந்து வந்துங் குறிற்பின்னர் நெடில் இணைந்து வந்தும் அவை ஒற்றடுத்தும் முறையானே நிரனிறை வகையானே நேரசையும் நிரையசையுமென்றாம் (எ - று). 'குறிலே நெடிலே ஒற்றொடு வருதலொடு” எனவும், "குறிலிணை குறினெடில் ஒற்றொடு வருதலொடு” 1. குறிலே நெடிலே குறிலினை குறினெடில்’ என முற்கூறப்பட்ட நான்கும் ஒருபொருளாய் எண்ணப்பட்டு, அவை குறிலே நெடிலே எனவும், குறிலினை குறினெடில் எனவும் பின் இரண்டாகி அவை முறையே நேரும் நிரையும் என இரண்டாகப் பகுக்கப்பெறுதலான் இதுவுமொரு நிரனிறை என்றார். ஒற்றொடுவருதல் நேர்நிரை யிரண்டிற்கும் பொது.