பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா க. f}} - cists எனவும், வேறு நிரனிறீஇப் பொருளுரைக்க.1 மெய்ப்பட நாடி’ யென்பது பொருள் பெற ஆராய்ந்து; எனவே, இப்பெயர் ஆட்சி காரணமேயன்றிக் குணங்காரணமாகலுமுடைய வென்றவாறு. உயிரில்லெழுத்தல்லாதன (356) தனித்து நிற்றலின் இயலசை யென்னும் பொருள்பட நேரசை யென்றாயிற்று.2 அவை இரண்டு நிரைதலின் இணையசையென்னும் பொருள்பட நிரையசை யென்றாயிற்று.8 அல்லதுரஉம் மெய்ப் பட நாடி என்றதனான் அவ்வாய்பாடே அவற்றுக்குக் காரண மென்பது உங் கொள்க.4 உடம்பொடு புணர்த்தல் (565) என்பதனால் உதாரணமுங் கூறியவாறு. அவை நேர்நிரையெனச் சொல்லிக் கண்டுகொள்க : அ ஆ எனவும், அல் ஆல் எனவும், பல பலா எனவும், புகர் புகார் எனவும், பிறவும் இவ்வாறு வருவனவெல்லாங் கொள்க. மற்றுக் குறினெடிலென எழுத்தாக ஓதியதென்னை? சொல் லாய வழி அசையாகாவோ வெனின், அவை ஒற்றொடு வருத லென்றதனானே, சொல்லாதலும் நேர்ந்தானாகவே அவை இரு வாற்றானும் அசையாமென்பது சீரின்றன்மைக்கண் வந்தது. 1. குறிலேநெடிலே குறிலினை குறினெடில்' என எண்ணப்பட்ட நான்கினைக் 'குறிலேநெடிலே’ எனவும் குறிலிணை குறினெடில்' எனவும் கூட்டி இரண்டாக வேறு நிறுத்தி, அவையிரண்டும் ஒற்றொடுவருதலொடு கூட்டி முறையே நேரும் நிரையும் ஆம்என நிரல்நிறை:ாகப்பொருள்கொள்க என்பதாம். 2. உயிர்இல் எழுத்து-ஒற்றெழுத்து. ஒற்றெழுத்தல்லாத குறிலும் நெடிலும் தம்மியல்பில் நேர் (தனி) நின்று அசையாதலின் நேரசை யென்னும் பெயர்த்தாயிற்று. நேர்தல்-தனிநிற்றல். 3. குறிலும் நெடிலும் குறிலொடுகுறில் குறிலொடுநெடில் என இணைந்து நின்று அசையாதலின் நிரையசையென்னும் பெயர்த்தாயிற்று. நிரைதல்இணைந்து நிற்றல். 4. (நேர் , நிரை என்னும்) அவ்வாய்பாடே அவற்றுக்குதாரணமென்ப து உங்கொள்க' என்றிருத்தல் வேண்டும். 5. குறில் நெடில் என எழுத்தாக வோதினாராயினும் அவை சொல்லாதலும புலப்பட ஒற்றொடு வருதலொடு எனக் கூறினாராதலின், நேர்நிரை என்னும் அசைகள் எழுத்தாதலும் சொல்லாதலும் என இருநிலைமையும் உடையனவாதல் பெறப்படும். அவையிருவாற்றானும் சீரின் தன்மைக்கண் அசையாமென்பது' என முற்றுப்புள்ளியிட்டும், சீரின் தன்மைக்கண் உள்ளார்.தோழி என நேரசை நான்கும், வரிவரால் கலா வலின்' என திரையசை நான்கும் வந்தன எனத் தொடர்புபடுத்தியும் இவ்வுரைப்பகுதியின் பொருளையுணர்க.