பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ச உடு என்பன நிரைபசை. தொகுத்து நோக்குழி நேர், நிரை, நேர்பு நிரைபு என்பன தாமே யுதாரணமாம், அஃதேல் நேர்பசை நிரை பசையெனக் காக்கைபாடினியார் முதலாகிய ஒருசாராசிரியர் கொண்டிலரா லெனின், அவர் அதனை யிரண்டசையாக்கியுரைத் தாராயினும் அதனை முடியநிறுத்தராது, வெண்பாவீற்றின்கண் வந்த குற்றுகர நேரீற்றியற்சீரைத் தேமா புளிமா என்னும் உதாரணத்தான் ஒசையூட்டிற் செப்பலோசை குன்றுமென்றஞ்சி, காசு பிறப்பென உகர வீற்றான். உதாரணங் காட்டினமையானும், சீருந்தளையுங் கெடுவழிக் குற்றியலுகரம் அலகுபெறாதென்றமை யானும், வெண்பா விற்றினு முற்றுகரமுஞ் சிறுபான்மை வருமென உடன்பட்டமையானும், நேர்பசை நிரைபசை யென்று வருதல் வலியுடைத்தென்று கொள்க. அவை செய்யு ளீற்றின் கண் பெருமாறு : 'பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவ னடிசேரா தார்’ (குறள், ம்) வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க் கியாண்டும் இடும்பை இல” (குறள் ச) 'இருள் சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள் சேர் புகழ்புரிந்தார் மாட்டு” (குறள் ரு) "தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லான் மனக்கவலை மாற்றல் அரிது” (குறள். எ) என வரும். பிறவு மன்ன, அலகிடுங்கால் நேரசை ஒரலகு, நிரையசை யிரண்டலகு; நேர்பசை மூன்றலகு, நிரைபசை நான்கலகு பெறும். (ச) 1 . அலகிடுதலாவது, எழுத்துக்களையெண்ணி அசைப்படுத்தல், அவ்வா றலகிடுகிடத்து நேரசை ஒரெழுத்தாகிய எண்ணிக்கையும், நிரையசை இரண்டெழுத்தாகிய எண்ணிக்கையும், நேர்பு மூன்று மாத்திரையாகிய அளவும், நிரைபு நான்கு மாத்திரையாகிய அளவும் பெறும் எனக்கொள்ளுதல் பொருத்த முடையதாம். இவ்வாறு இயலசைக்கு எழுத்தளவும் உரியசைக்கு மாத்திரையளவும் கொண்டு அலகிடுதலைக் குறித்ததே நேரோ ரலகு நிரையிரண் டலகு நேர்பு மூன்றலகு நிரைபு நான்கலகென் றோ தினர் புலவர் உணரு மாறே (யா-வி. அசையோத்து-இ- :) எனவரும் யாப்பருங்கலவிருத்தி மேற்கோட் சூத்திரமாகும்.