பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/526

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ருள்கள் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் “மொய்த்துடன் தவழு முகிலே பொழிலே” (யாப். வி. ப கருங்) இஃது இணையியைபு. 'தாஅட் டாஅ மரைமல ருழக்கி’ (யாப்.வி.ப கருஅ) இஃது இணையளபெடை, எனவரும். இனிக் கூழை வருமாறு : "அகன்ற அல்குல் அந்நுண் மருங்குல் ” (யாப்.வி.ப. காடC) இது கூழை மோனை. "நன்னிற மென்முலை மின்னிடை வருந்த”. இது கூழை யெதுகை. (யாப்.வி ப க.க. ச) "சிறிய பெரிய நிகர்மலர்க் கோதைதன்'. இது கூழைமுரண் (யாப் விப கச எ) "மாதர் நகிலே வல்லே இயலே’. (யாப். வி. ப. கருங்.) இது கூழை யியைபு. 'மாஅத் தாஅண் மோஒட் டெருமை’. (யாப்.வி.ட கருஅ) இது கூழையளபெடை என வரும். முற்றாவது நான்கு சீரும் ஒத்துவருவது. 'அயில்வேல் அனுக்கி அம்பலைத் தமர்த்த’. இது முற்றுமோனை. பிறவுமன்ன. - (யாப் வி.ப. கா.0) இனி மேற்கதுவா யாவது நான்கு சீரினும் இரண்டாம் சீரொழிய ஏனைய வருவது. “அரும்பிய கொங்கை அவ்வளை அமைத்தோள்'. (யாப். வி.ப. கா. க) பிறவுமன்ன. கீழ்க்கதுவா யாவது மூன்றாஞ் சீரொழிய ஏனைய. வருவது. 'அவிர்மதி அனைய திருதுதல் அரிவை' பிறவுமன் ன. (யாப், வி. ப. கா. க) அந்தாதித் தொடைக்குதாரணம் : உலகுடன் விளங்கும் ஒளிதிகழ் அவிர்மதி மதிநலன் அழிக்கும் வளங்கெழு முக்குடை முக்குடை நீழல் பொற்புடை ஆசனம்